/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.பி., வீட்டு மின் இணைப்பு துண்டித்தவர் மீது வழக்கு
/
எம்.பி., வீட்டு மின் இணைப்பு துண்டித்தவர் மீது வழக்கு
எம்.பி., வீட்டு மின் இணைப்பு துண்டித்தவர் மீது வழக்கு
எம்.பி., வீட்டு மின் இணைப்பு துண்டித்தவர் மீது வழக்கு
ADDED : ஏப் 07, 2025 10:24 PM
பெங்களூரு; காங்கிரஸ் எம்.பி., வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்த, அடுக்குமாடி குடியிருப்பு மேலாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே. இவரது மகன் சாகர் கன்ட்ரே, 26. பீதர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யாக உள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா அடுக்குமாடி குடியிருப்பில் முதலாவது தளத்தில் சாகர் கன்ட்ரே வசிக்கிறார்.
அந்த வீட்டில் சில புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டி இருந்தது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பின் சங்கத்தின் அனுமதி பெற்று பணிகள் நடந்தன. வீட்டின் படிக்கட்டுகளிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் சந்திரகுமார், யாருக்கும் தகவல் கொடுக்காமல், எம்.பி., வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து எம்.பி., உதவியாளர் அளித்த புகாரில், விதான் சவுதா போலீசார் சந்திரகுமார் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

