/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நண்பரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
/
நண்பரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
நண்பரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
நண்பரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : அக் 30, 2025 04:49 AM
சந்திரா லே - அவுட்:  பண விவகாரத்தில் நண்பரை கடத்தி, குடோனில் அடைத்து தாக்கியதுடன், 'ரேணுகாசாமியை போன்று கொடூரமாக கொலை செய்வேன்' என மிரட்டிய தொழிலதிபர் உட்பட 2 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
மாண்டியாவை சேர்ந்தவர் பாகேகவுடா, 40. இவரது நண்பர் மஞ்சுநாத், 42; தொழிலதிபர். இவர்கள் இருவரும் பெங்களூரில் தனியார் நிறுவனம் நடத்தினர். நஷ்டத்தில் இயங்கியதால், கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனம் மூடப்பட்டது.
'உன்னால் தான் நிறுவனம் நஷ்டத்தில் சென்றது. எனக்கு 44 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்' என, பாகேகவுடாவிடம், மஞ்சுநாத் கேட்டுள்ளார்.
முதலில் ஒப்புக் கொண்ட பாகேகவுடா, பின் பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். கடந்த 25ம் தேதி மாண்டியாவில் இருந்து பெங்களூரு வந்த பாகேகவுடாவை, மஞ்சுநாத், அவரது நண்பர் பரமேஸ்வர் காரில், சந்திரா லே - அவுட்டில் உள்ள குடோனுக்கு கடத்திச் சென்றனர். அவரை இருவரும் தாக்கினர்.
'விரைவில் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடிகர் தர்ஷன், ரேணுகாசாமியை கொன்றது போல, உன்னையும் கொடூரமாக கொலை செய்வேன்' என, மஞ்சுநாத் மிரட்டி உள்ளார். பின், பாகே கவுடாவை விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து 27ம் தேதி சந்திரா லே - அவுட் போலீசில், பாகேகவுடா புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மஞ்சுநாத், பரமேஸ்வர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸ் தேடுகிறது.

