பெண்ணுக்கு ஆபாச 'மெசேஜ்' அனுப்பியவர் மீது வழக்கு
பெண்ணுக்கு ஆபாச 'மெசேஜ்' அனுப்பியவர் மீது வழக்கு
ADDED : மார் 16, 2026 07:10 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: வங்கி பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு கச்சகாரனஹள்ளியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் 40 வயது பெண் ஊழியராக பணியாற்றுகிறார். கடந்த 10ம் தேதி வங்கிக்கு வந்த ரவி ஷெட்டி என்பவர், பெண் ஊழியரிடம் சென்று இணைய வங்கி சேவைகள் குறித்து கேட்டார்.
பின், பெண் ஊழியரின் மொபைல் போன் நம்பரை வாங்கினார்.
வீட்டிற்கு சென்றதும் பெண் ஊழியருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பினார். இதுகுறித்து பெண் ஊழியர், மேல் அதிகாரியிடம் கூறினார். ரவி ஷெட்டியை வங்கிக்கு வரவழைத்து எச்சரித்தனர். ஆனால், மீண்டும் ஆபாச மெசேஜ் அனுப்பினார்.
இதுகுறித்து பெண் ஊழியர் அளித்த புகாரில், ரவி ஷெட்டி மீது ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
