/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுங்கச்சாவடியை சூறையாடிய எம்.எல்.ஏ., மகன் மீது வழக்கு
/
சுங்கச்சாவடியை சூறையாடிய எம்.எல்.ஏ., மகன் மீது வழக்கு
சுங்கச்சாவடியை சூறையாடிய எம்.எல்.ஏ., மகன் மீது வழக்கு
சுங்கச்சாவடியை சூறையாடிய எம்.எல்.ஏ., மகன் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2025 04:43 AM

ராய்ச்சூர் : சுங்கச்சாவடியை சூறையாடிய வழக்கில், தேவதுர்கா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரேம்மா நாயக் மகன் உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராய்ச்சூர் தேவதுர்கா தாலுகா ஜாலஹள்ளி, காகர்கல் கிராமங்கள் வழியாக செல்லும், தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, சுங்கச்சாவடி திறக்கப்பட்டது.
இந்த வழியாக செல்லும் உள்ளூர் மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவ்வப்போது போராட்டமும் நடந்து வந்தது.
கடந்த 25ம் தேதி அதிகாலை 1:00 மணியளவில், காகர்கல் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடிக்கு ஒரு குழுவாக சென்றவர், சுங்கச்சாவடியில் இருந்த கணினிகள், பொருட்கள், கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்தனர். சுங்கச்சாவடியை தேவதுர்கா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரேம்மா நாயக் மகன் சந்தோஷ் உட்பட 50 பேர், சூறையாடியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.