/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நள்ளிரவு தாண்டியும் பார்ட்டி 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
/
நள்ளிரவு தாண்டியும் பார்ட்டி 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
நள்ளிரவு தாண்டியும் பார்ட்டி 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
நள்ளிரவு தாண்டியும் பார்ட்டி 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
ADDED : ஜன 02, 2026 05:58 AM
தொட்டபல்லாபூர்: நள்ளிரவு தாண்டியும் சட்டவிரோதமாக பார்ட்டி நடந்த சொகுசு விடுதியில், போலீசார் சோதனை நடத்தினர். 40 இளைஞர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், ஹெக்கடஹள்ளி அருகேயுள்ள, 'ஈசீஸ்' சொகுசு விடுதியில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை துவங்கிய பார்ட்டி, நள்ளிரவை தாண்டியும் தொடர்ந்தது.
பலர் மதுபானம் அருந்தியதுடன், அதிகமான சத்தத்துடன் இசையையும் ஒலிக்க வைத்தனர். அக்கம், பக்கத்தினருக்கு தொந்தரவை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து, தொட்டபல்லாபூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சோதனை நடத்திய போது, சட்டவிரோதமாக மதுபான பார்ட்டி நடத்துவது தெரிந்தது. மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பார்ட்டியில் குடிபோதையில் தள்ளாடிய, 40 முதல் 50 இளைஞர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. சொகுசு விடுதி உரிமையாளர் மற்றும் பார்ட்டி ஏற்பாடு செய்தவர் மீதும், வழக்கு பதிவு செய்துள்ளனர். பார்ட்டியில் இருந்தவர்களை வெளியேற்றினர்.

