/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வாலிபர் கொலை
/
'மாஜி' காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வாலிபர் கொலை
'மாஜி' காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வாலிபர் கொலை
'மாஜி' காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வாலிபர் கொலை
ADDED : ஜன 02, 2026 05:58 AM

சிக்கமகளூரு: முன்னாள் காதலிக்கு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய வாலிபர் குத்திக் கொல்லப்பட்டார். பெண்ணின் வருங்கால கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிக்கமகளூரின் தரிகெரே தாலுகா உதேவா கிராமத்தில் வசித்தவர் மஞ்சுநாத், 21. இவரும், தரிகெரே டவுனில் வசிக்கும், 20 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். கருத்து வேறுபாட்டால் காதல் முறிந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன் இளம்பெண்ணுக்கும், வேணு, 25 என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் மார்ச்சில் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில், முன்னாள் காதலிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மஞ்சுநாத் அடிக்கடி மெசேஜ் அனுப்பி உள்ளார். 'எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது; மெசேஜ் அனுப்ப வேண்டாம்' என்று இளம்பெண் கூறியும் அவர் கேட்கவில்லை. கடந்த, 27ம் தேதி இளம்பெண்ணிற்கு பிறந்தநாள்.
அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, மஞ்சுநாத் வாழ்த்து கூறியுள்ளார். இந்தப் பதிவை பார்த்த வேணு, தன் வருங்கால மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். நான் பல முறை கூறியும், எனக்கு மெசேஜ் அனுப்பி மஞ்சுநாத் தொல்லை கொடுப்பதாக, வேணுவிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த வேணு, இளம்பெண்ணின் சகோதரர் கிரண், அவரது நண்பர்கள் அப்பு, மஞ்சு ஆகியோர் மஞ்சுநாத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத்திடம் மொபைல் போனில் பேசி, அட்டிகனாலு என்ற இடத்திற்கு வரவழைத்தனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தகராறில், மஞ்சுநாத்தை நான்கு பேரும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர்.
உயிருக்கு போராடிய மஞ்சுநாத் மீட்கப்பட்டு, ஷிவமொக்கா மெக்கான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை இறந்தார். வேணு, கிரண், அப்பு, மஞ்சுவை, தரிகெரே போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

