பெண்ணின் கருவை கலைத்த போலீஸ் எஸ்.ஐ., மீது வழக்கு
பெண்ணின் கருவை கலைத்த போலீஸ் எஸ்.ஐ., மீது வழக்கு
ADDED : மே 17, 2026 11:26 PM

சித்ரதுர்கா: திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து, பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்ததுடன், திருமணத்திற்கு மறுத்த எஸ்.ஐ., மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
தாவணகெரேயை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவருக்கும், சித்ரதுர்கா ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் வருண்குமார், 31, என்பவருக்கும், கடந்த ஆண்டு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
சில நாட்களில் இருவரும் காதலிக்க துவங்கினர். காதலியை பார்க்க பெங்களூரு சென்ற வருண்குமார், பசவேஸ்வரா நகரில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்றார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து உள்ளார்.
இதனால் இளம்பெண் கர்ப்பமாகி உள்ளார். இப்போ தைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி மாத்திரை கொடுத்து இளம்பெண் வயிற்றில் வளர்ந்த கருவை அழித்து உள்ளார்.
பின், இள ம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்த அவர், திருமணம் செய்யவும் மறுத்து உள்ளார். இதுபற்றி பெற்றோரிடம் இளம்பெண் கூறினார். நேற்று காலை சித்ரதுர்கா எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்ற இளம்பெண், எஸ்.பி., ரஞ்சித்குமார் பண்டாருவை சந்தித்து, வருண்குமார் மீது புகார் அளித்தார். இந்த புகாரை சித்ரதுர்கா டவுன் போலீஸ் நிலையத்திற்கு எஸ்.பி., அனுப்பி வைத்தார். புகாரின்படி வருண்குமார் மீது பலாத்காரம் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது.
