தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கஞ்சா போதையில் தள்ளாட்டம் மாணவர் மீது வழக்கு

 கஞ்சா போதையில் தள்ளாட்டம் மாணவர் மீது வழக்கு

 கஞ்சா போதையில் தள்ளாட்டம் மாணவர் மீது வழக்கு


ADDED : ஏப் 14, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: பொது இடத்தில் கஞ்சா போதையில் தள்ளாடிய மாணவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.

ஷிவமொக்கா மாவட்டத்தின், விநோபா நகர் போலீசார், நேற்று முன் தினம் நள்ளிரவு, சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர், நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த போலீசார், இளைஞரை நிறுத்தி விசாரித்த போது, விசித்திரமாக நடந்து கொண்டார்.

அவர் கஞ்சா அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். அவரை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தியதில், அவர் கஞ்சா பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரித்த போது இவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்பது தெரிய வந்தது. பொது இடத்தில் கஞ்சா போதையில் இருந்த அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us