தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை  அடித்த ஆசிரியை  மீது வழக்கு

 வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை  அடித்த ஆசிரியை  மீது வழக்கு

 வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை  அடித்த ஆசிரியை  மீது வழக்கு


ADDED : ஜன 31, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நந்தினி லே - அவுட்: வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை கண்மூடித்தனமாக அடித்ததுடன், பெற்றோரிடம் கூறினால், கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டிய, ஆசிரியை மீது வழக்கு பதிவாகி உள்ளது.

பெங்களூரு நந்தினி லே - அவுட்டை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு 9 வயதில் மகன் உள்ளான்.

தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். லட்சுமி, மஹாராஷ்டிராவில் வே லை செய்வதால், மகனை கல்வி நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்க வைத்தார்.கடந்த சில தினங்களுக்கு முன் மகனை பார்க்க வந்தார்.

அப்போது, சிறுவன் கை, முதுகில் காயம் இருந்தது. அதுபற்றி கேட்ட போது வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததால், ஆசிரியை ஆங்கிலின் தன்னை கண்மூடித்தனமாக அடித்ததுடன், பெற்றோரிடம் கூறினால், கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக தாயிடம் கூறினார்.

இதுபற்றி நேற்று முன்தினம் நந்தினி லே - அவுட் போலீசில், லட்சுமி புகார் செய்தார். ஆசிரியை ஆங்கிலின் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவாகி உள்ளது. விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us