/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழி தீர்ப்பதாக பதிவு வாலிபர் மீது வழக்கு
/
பழி தீர்ப்பதாக பதிவு வாலிபர் மீது வழக்கு
ADDED : மே 13, 2025 12:58 AM
மைசூரு : 'ரவுடி கொலைக்கு பழி தீர்ப்பேன்' என, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மைசூரு டவுன் கியாத்தமானஹள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 33; ரவுடி. பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், கடந்த 5ம் தேதி, அவரது நண்பர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வருணா போலீசார் விசாரித்தனர்.
கடந்த 6ம் தேதி, மைசூரு நகர் பகுதியை சேர்ந்த பிரவீன், 27, அவினாஷ், 24, ரவி, 29, சந்துரு, 30, ஆனந்த், 28, வெங்கடேஷ் ஷெட்டி, 26, லட்சுமி, 28 ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரண் அடைந்தனர்.
இதனால், கொலையான கார்த்திக்கின் நண்பர்கள் சிலர், ஆத்திரம் அடைந்தனர். கார்த்திக்கை கொலை செய்தவர்களை பழிவாங்கும் வெறியுடன் இருந்தனர்.
கார்த்திக்கின் நண்பர்களின் ஒருவரான மகேஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில், 'என் அண்ணன் கொலைக்கு காரணமானவர்களுக்கு, பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது; பகையை முடிக்க காத்திருக்கிறேன்' என கூறியிருந்தார். அவர் மீது நேற்று வருணா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.