/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்லட்கா பிரபாகர் பட் மீது வழக்கு பதிவு
/
கல்லட்கா பிரபாகர் பட் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 27, 2025 03:53 AM

தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம் உப்பலிகேயில் கடந்த 20 ம் தேதி தீப உத்சவம் நடந்தது. இதில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட், 'முஸ்லிம் பெண்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதுபோன்று, ஹிந்து பெண்களும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று பேசியிருந்தார்.
இவரின் பேச்சை கண்டித்து புத்துாரை சேர்ந்த ஈஸ்வரி பத்முன்ஜா, புத்துார் ரூரல் போலீசில் புகார் செய்து உள்ளார். இதையடுத்து கல்லட்கா பிரபாகர் பட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், கிராம அபிவிருத்தி பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று அளித்த பேட்டி:
நீதிமன்றம் உத்தரவிட்டால் சித்தாபூரில் நவ., 2ல் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தலாம். சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. கல்லட்கா பிரபாகர், சட்டத்தை விட உயர்ந்தவரா?
ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் பேசுவது போன்று பொது இடங்களில் பேசக்கூடாது.
நவ., 2ல் ஊர்வலம் நடத்த 11 அமைப்புகள் அனுமதி கேட்டு உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள், அந்த அமைப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பர். அனைவருக்கும் அனுமதி கொடுப்பது என்பது இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.

