தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவிக்கு சித்ரவதை ஏட்டு மீது வழக்கு பதிவு

மனைவிக்கு சித்ரவதை ஏட்டு மீது வழக்கு பதிவு

மனைவிக்கு சித்ரவதை ஏட்டு மீது வழக்கு பதிவு


ADDED : மே 22, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: தொடர்ந்து மூன்றுஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி மனைவியிடம், விவாகரத்து கேட்டு சித்ரவதை செய்த ஏட்டு மீது, மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின், ராம்புரா கிராமத்தில் வசிப்பவர் கென்டகன்னசாமி, 30. இவர் கோலார் மாவட்ட ஆயுதப்படையில், ஏட்டாக பணியாற்றுகிறார்.

இவரும், எதிர் வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணும், மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களின்திருமணத்துக்கு, இரண்டு குடும்பத்தினரும்சம்மதித்தனர்.

கடந்த ஓராண்டுக்கு முன், பிளிகெரே நஞ்சுண் டேஸ்வரா திருமண மண்டபத்தில், கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் கென்ட கன்னசாமிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.அவருடன் சேர்ந்து வாழவும் விரும்புகிறார்.இதையறிந்த மனைவி,கணவரை கண்டித்தார்.

இதை பொருட்படுத்தாத கென்டகன்னசாமி, ஒரே வீட்டில் மூவரும் சேர்ந்து வாழலாம் என, பிடிவாதம் பிடித்தார். இதற்கு மனைவி சம்மதிக்கவில்லை. எனவே இவரை விலக்கி வைத்து விட்டு, கள்ளக்காதலியுடன் வாழ கென்டகன்னசாமி விரும்புகிறார். விவாகரத்து அளிக்கும்படி, மனைவியைசித்ரவதை செய்கிறார்.

'உன் வயிற்றில் உள்ள குழந்தையை கலைத்து விடு. ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு என்னை விட்டு சென்று விடு. நீ எனக்கு தேவையில்லை. குழந்தையும் தேவையில்லை' என கூறுகிறார்.

கணவரின் தொல்லையால் மனம் வெறுத்த மனைவி, மைசூரின் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us