/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்ட காரில் பணம், தங்க நகைகள் மீட்பு
/
திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்ட காரில் பணம், தங்க நகைகள் மீட்பு
திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்ட காரில் பணம், தங்க நகைகள் மீட்பு
திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்ட காரில் பணம், தங்க நகைகள் மீட்பு
ADDED : நவ 07, 2025 05:39 AM

சிக்கமகளூரு: திருட்டு வழக்கில் பறிமுதல் செய்து, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில், கட்டு கட்டாக பணமும், தங்கநகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின், ஹரந்துார் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்தே கவுடாவின் மகன் வெங்கடேஷின் பண்ணை வீடு உள்ளது. இங்கு அக்டோபர் 21ம் தேதி, கொள்ளை நடந்தது. மர்ம கும்பல் 6 லட்சம் ரொக்கம், 37.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து, வெங்கடேஷ் அளித்த புகாரின்படி கொப்பா போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தினர். நேபாளை சேர்ந்த ராஜேந்திரா, ஏகேந்திரா குடல் பத்வால், கரம்சிங் பகதுார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன,
போலீஸ் நிலைய வளாகத்தில், கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. குற்றவாளிகள் கைதான போது, கார்களை சோதனையிடவில்லை.
அந்த கார்களை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். ஒரு காரின் இருக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை மதிப்பிட்டதில், 3.41 லட்சம் ரூபாயும், 595 கிராம் தங்க நகைகள், 589 கிராம் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிந்தது. கொள்ளையர்கள் வேறு இடங்களில் கொள்ளையடித்ததாக இருக்கலாம் என, போலீசார் சந்தேக்கின்றனர். கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

