/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம் 90 நாட்களில் முடிக்க இலக்கு
/
ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம் 90 நாட்களில் முடிக்க இலக்கு
ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம் 90 நாட்களில் முடிக்க இலக்கு
ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம் 90 நாட்களில் முடிக்க இலக்கு
ADDED : ஆக 24, 2025 05:35 AM
பெங்களூரு: கர்நாடக பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம், ஜாதி வாரி கணக்கெடுப்பை நேற்று துவக்கியது. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை தெரிவித்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜாதி வாரியான கணக்கெடுப்பு, இன்று (நேற்று) துவங்கியது. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் கல்வி, வாழ்க்கை தரத்தை தெரிந்து கொள்வது, இந்த ஆய்வின் நோக்கமாகும். 90 நாட்களில் ஆய்வை முடிக்க வேண்டும்.
முதல் கட்டத்தில், வீடுகளின் பட்டியல் மற்றும் வரைபடம் தயாரிக்கப்படும். அனைத்து வீடுகளும் எண்ணி முடித்த பின், வரிசை எண்கள் அளிக்கப்படும்.
அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு இருப்பதால், குடியிருப்பு வீடுகளின் மின் மீட்டர்கள் அடிப்படையில், வீடுகளை அடையாளம் கண்டு, அங்குள்ள மக்களை பற்றி ஆய்வு செய்வதால், எந்த வீடுகளும் கணக்கெடுப்பில் இருந்து விடுபடாது.
இரண்டாம் கட்ட ஆய்வு பணிகள், செப்டம்பர் 22 முதல் முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடக்கும். அந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இருப்பதால், ஆய்வுக்கு வசதியாக இருக்கும்.
ஆய்வுக்காக இ - நிர்வாக துறை, மின் துறை ஒருங்கிணைந்து, செயலி வடிவமைத்துள்ளன. இது ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க, உதவியாக இருக்கும்.
அந்தந்த சமுதாய மக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, திட்டங்கள் வகுக்கவும், மாநிலத்தின் ஏழு கோடி மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகள் செயல்படுத்திய திட்டங்கள், அவர்களை சென்றடைந்தனவா என்பதை தெரிந்து கொள்ள, இந்த ஆய்வு உதவியாக இருக்கும்.
ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை தெரிவித்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.