தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சாலைகளில் திரியும் மாடுகளின் தொந்தரவுக்கு தீர்வு காண, கிழக்கு பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, கூடுதல் கமிஷனர் லோகன்டே ஸ்னேஹல் சுதாகர் கூறியதாவது:

சாலைகளில் திரியும் கால்நடைகளை, மாநகராட்சியின் சிறப்பு ஊழியர்கள், ஹைட்ராலிக் வாகனங்கள் மூலமாக, பாதுகாப்பாக பிடித்து கால்நடை காப்பகங்களில் விடுவர்.

விதிகளை மீறி கால்நடைகளை சாலைகளில் விடும் உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். அவ்வப்போது விதிகளை மீறி, சாலைகளில் கால்நடைகளை அலைய விட்டால், உரிமையாளர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உரிமையாளர்கள் இல்லாத கால்நடைகள், கோசாலைக்கு அனுப்பப்படும்.

பசுக்கள், கன்றுகள், எருமைகள், காளைகள் மீட்கப்பட்டால், முதல் மூன்று நாட்களுக்கு தலா 600 ரூபாய், அதன்பின் தினம் 300 ரூபாய் வீதம், அபராதம் விதிக்கப்படும். கன்றுக்குட்டிக்கு முத்ல மூன்று நாட்களுக்கு 300 ரூபாய், அதன்பின் ஒவ்வொரு நாளுக்கும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

குதிரைகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு 100 ரூபாய், அதன் பின் தினம் 50 ரூபாய் அபராதம் இருக்கும். கழுதை, பன்றிகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு 50 ரூபாய், அதன் பின் தினம் 25 ரூபாயும், ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு 25 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மட்டுமே, கால்நடைகளை பிடிக்கும் நடவடிக்கை இருக்கும். விடுமுறை நாட்களில் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us