தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நந்தினி பால் 1 லிட்டர் ரூ.8 அதிகரிப்பு கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல்

நந்தினி பால் 1 லிட்டர் ரூ.8 அதிகரிப்பு கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல்

நந்தினி பால் 1 லிட்டர் ரூ.8 அதிகரிப்பு கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல்


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நந்தினி பாலின் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு, 8 ரூபாய் உயர்த்த நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது எம்.எல்.சி., தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

முதல்வர் சிவகுமார் தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

நந்தினி 1 லிட்டர் பால் விலையை 8 ரூபாய் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எம்.எல்.சி., தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விலை உயர்வை அமல்படுத்த அனுமதி கோரி, தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் சிவகுமார் கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டால், வரும், நவ., 1ம் தேதி முதல், பால் விலை உயர்வு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல்



மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் வார்டு வரியான இட ஒதுக்கீட்டு பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தால், ஜன., முதல் வாரத்தில் மாவட்டம், தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, நகரில் சட்டம் – ஒழங்கு கட்டுப்பாடு, போக்குவரத்து மேலாண்மை, பொது பாதுகாப்பு ஆகியவற்றை மேலும் திறம்பட நிர்வகிக்கும் நோக்கில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரகத்தை முழுமையாக மறுசீரமைக்க திட்டமிடப்பட்டது .

கர்நாடகாவில் நீதித்துறையின் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, 704 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு, இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநிலத்தில் இயற்கை பேரிடர்கள் மற்றும் அவசர நிலைகளை திறம்பட கையாள, மத்திய அரசின், ‘யுவ ஆப் மித்ரா’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய, அவசர கால மீட்புக் கருவி தொகுப்பு கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

 குற்றவியல் சட்ட திருத்த அவசர சட்டம் – 1944 (கர்நாடக திருத்தம்) மசோதா, 2022-ஐ திரும்ப பெறுவதற்கு ஒப்புதல்

கலப்பின பசு



வட கர்நாடகாவில் கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாடு, பால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், பெல்காவி மற்றும் கலபுரகி கோட்டங்களை சேர்ந்த தகுதியுள்ள 9,600 பெண் பயனாளிகளுக்கு, 25 சதவீத மானியத்தில் கலப்பின பசு அல்லது மேம்படுத்தப்பட்ட எருமையை வாங்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை நிர்வாக ஒப்புதல்.

மேலும், பல விஷயங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us