/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காவேரி 2.0 மென்பொருள் 'ஹேக்' அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா 'திடுக்'
/
காவேரி 2.0 மென்பொருள் 'ஹேக்' அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா 'திடுக்'
காவேரி 2.0 மென்பொருள் 'ஹேக்' அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா 'திடுக்'
காவேரி 2.0 மென்பொருள் 'ஹேக்' அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா 'திடுக்'
ADDED : பிப் 09, 2025 06:56 AM

பெங்களூரு: சொத்து வாங்குவது, விற்பது உட்பட, பத்திரப்பதிவு செயல்பாட்டுக்கு பயன்படுத்தும், 'காவேரி 2.0' மென்பொருள் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேற்று அளித்த பேட்டி:
சொத்து வாங்குவது, விற்பது உட்பட, பத்திரப்பதிவு செயல்பாட்டுக்கு பயன்படுத்தும் நோக்கில், 'காவேரி 2.0' மென் பொருள் வடிவமைக்கப்பட்டது. இந்த செயலி 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயத்தை அரசு தீவிரமாக கருதுகிறது.
பத்திரப்பதிவு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்தில், 'ஹேக்' செய்திருக்க வாய்ப்புள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் என, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இது போன்ற செயல்களை தடுக்க, விசாரணை உதவும். அது மட்டுமின்றி, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை பலப்படுத்த, நமக்கு அனுகூலமாக இருக்கும்.
சர்வர் பிரச்னையால், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் துணை பதிவு அதிகாரிகள் அலுவலகத்தில், பதிவுப் பணிகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக, ஆய்வு செய்தபோது, மர்மநபர்கள் கெட்ட நோக்கத்துடன், காவேரி 2.0 மென்பொருளை 'ஹேக்' செய்து, டேட்டாக்களை திருட போலி கணக்குகளை திறந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

