/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
/
முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
ADDED : ஜன 01, 2026 06:22 AM

பல்லாரி: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உதவியாளர் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 94 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை என, இரண்டு விசாரணை அமைப்புகள் விசாரிக்கின்றன. இவ்வழக்கில் அமைச்சராக இருந்த நாகேந்திரா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார். இவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முறைகேடு வழக்கில், நாகேந்திராவின் உதவியாளர் விஸ்வநாத்திற்கும் தொடர்பு இருப்பது பற்றி, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தெரிந்தது. நேற்று காலையில், பல்லாரி சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள் நான்கு பேர், விஸ்வநாத்தின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இல்லை. சோதனைக்கு பின் குடும்ப உறுப்பினர்களை, புருஸ்பேட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து அனுப்பினர்.