/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் குவிந்துள்ள குப்பை; சுகாதார சீர்கேட்டால் நாறும் தங்க நகரம்

ADDED : ஜன 01, 2026 06:23 AM

தங்கவயல்: தங்கவயலில், இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பொது நவீன கழிப்பறைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால், பயன்பாடின்றி சிதைந்து நாசமாகி வருகின்றன.
பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, 30 பூங்காக்களில், பல பூங்காக்கள் சீரற்று உள்ளன. அவைகளில் விஷப்பூச்சிகள் குடியேறியுள்ளன. அரசியல் கட்சியினரோ, நகராட்சி தேர்தலில் போட்டியிட மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். சமூக அக்கறையுடன் நாறும் நகரத்தை சீர்படுத்த அக்கறை காட்டுவதில்லை.
தங்கவயல் நகராட்சியில், 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆயினும், திட்டமிட்டபடி பணிகள் நிறைவேறியதாக தெரியவில்லை.
தங்கவயல் நகராட்சி உறுப்பினர்கள் பதவிக்காலம், 2025 அக்டோபரில் முடிவடைந்த பின், நகரத்தில் பல்வேறு இடங்களில் குப்பை குவிந்து கிடக்கின்றன. சாக்கடைகள் தெருக்களில் வழிந்தோடுகின்றன. குறிப்பாக, சுரங்க குடியிருப்பு பகுதியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என்பதே, தங்கவயலில் பலரது விருப்பமாக உள்ளது.