/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகை தொலைத்த தமிழக தம்பதி; தேடி கொடுத்த கர்நாடக அதிகாரி
/
நகை தொலைத்த தமிழக தம்பதி; தேடி கொடுத்த கர்நாடக அதிகாரி
நகை தொலைத்த தமிழக தம்பதி; தேடி கொடுத்த கர்நாடக அதிகாரி
நகை தொலைத்த தமிழக தம்பதி; தேடி கொடுத்த கர்நாடக அதிகாரி
ADDED : ஜன 01, 2026 06:24 AM
மாண்டியா: தமிழகத்தை சேர்ந்தவர் விமல் குமார். இவரது மனைவி ராதா. இவர்கள் தங்களின் குடும்பத்துடன், சில நாட்களுக்கு முன், மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ்.,பிருந்தாவனத்துக்கு சுற்றுலா வந்தனர். இரவு வரை பிருந்தாவனத்தை சுற்றிப்பார்த்த பின், விடுதி அறைக்கு திரும்பினர்.
அப்போது, ராதா தன் கையில் இருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிராம் தங்க பிரேஸ்லெட் காணாததை கவனித்தார்.
மறுநாள் விமல்குமார், தன் மனைவியின் பிரேஸ்லெட் தொலைந்து போனதாக, கே.ஆர்.எஸ்.,சின் தொழிற் பாதுகாப்பு படையினரிடம் புகார் அளித்தார்.
அவர்களும் பிருந்தாவனத்தின் அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பிருந்தாவனத்தின் வடக்கு பகுதியில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ஏ.எஸ்.ஐ., கிருஷ்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரும் தேடிய போது, மியூசிகல் பவுன்டெய்ன் அருகில் உள்ள நடைபாதையில், பிரேஸ்லெட் விழுந்திருப்பதை கண்டுபிடித்தார்.
அதன் தகவல்களை பெ ற்று கொண்டு, தம்பதியிடம் ஒப்படைத்தார். ஏ.எஸ்.ஐ., கிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

