தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்., பரப்பன அக்ரஹாரா சிறையில் சி.சி.பி., 'ரெய்டு'; கூர்மையான ஆயுதம், சிம் கார்டுகள், ரொக்கம் பறிமுதல்

 பெங்., பரப்பன அக்ரஹாரா சிறையில் சி.சி.பி., 'ரெய்டு'; கூர்மையான ஆயுதம், சிம் கார்டுகள், ரொக்கம் பறிமுதல்

 பெங்., பரப்பன அக்ரஹாரா சிறையில் சி.சி.பி., 'ரெய்டு'; கூர்மையான ஆயுதம், சிம் கார்டுகள், ரொக்கம் பறிமுதல்


ADDED : பிப் 24, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு நடத்திய சி.சி.பி., போலீசார், கூர்மையான ஆயுதம், புகையிலை, மொபைல் சிம் கார்டுகள், ஒயர்கள், 9,340 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், அங்குள்ள ரவுடியுடன் புகையிலை பிடித்து கொண்டு, டீ குடிக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின், பயங்கரவாதி, பல கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள், கையில் மொபைல் போனில், பேசிக் கொண்டிருப்பதும், 'டிவி' பார்த்து கொண்டிருப்பதும், சில கைதிகள் தங்கள் அறையில் மது அருந்தியபடி நடனமாடும் வீடியோக்கள் வைரலாயின.

விதிமுறைகள் கடுமை இதையடுத்து, சிறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு, ஐ.பி.எஸ்., அதிகாரியான அன்சு குமாரும், சிறைத்துறை டி.ஜி.பி.,யாக அலோக் குமாரும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து பெங்களூரு சிறையில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

புகையிலை வழங்காததால், கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எவ்வளவோ கூறியும் கேட்காததால், போராட்டம் நடத்தியவர்கள் மீது கூடுதல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அன்சு குமார் எச்சரித்தார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி காலை 6:00 மணிக்கு டி.சி.பி., தலைமையில் நான்கு ஏ.சி.பி.,க்கள், 13 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டில், கைதிகளிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள், புகையிலை பொருட்கள், வெள்ளி வளையல், செயின்கள், மொபைல் போன் சார்ஜர், மொ பைல் போன் பேட்டரிகள், டிரிம்மர்.

பறிமுதல் கஞ்சா புகைப்பதற்கான பிளாஸ்டிக் பைப்புகள், தீப்பெட்டி, லைட்டர், சீட்டு கட்டுகள், இரும்பு கம்பி, மின்சார சுடுநீர் தயாரிப்பு கருவி, 9,340 ரூபாய் ரொக்கம் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரப்பன அக்ரஹாரா சிறை உயர் அதிகாரியாக அன்சு குமார் நியமிக்கப்பட்டது முதல் பலமுறை ரெய்டுகள் நடத்தி உள்ளார். சமீபத்தில் நடத்திய ரெய்டின் போது, கைதிகளின் அறையில் இருந்து சமையல் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, பக்கெட்டுகள், படுக்கை போர்வைகள் இரண்டு டிராக்டர்கள் மூலம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us