தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு


ADDED : ஏப் 04, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில், சட்டசபை ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது' என, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவுக்கு, சட்டசபை செயலர் எம்.கே.விசாலாட்சி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

சட்டசபை ஊழியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இதை, சபாநாயகர் காதர் முன்னதாகவே வலியுறுத்தி இருந்தார். சட்டசபை, லோக்சபா என்பவை தன்னாட்சி அமைப்பாகும். அவற்றில் பணிபுரியும் ஊழியர்களைமக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவது சரியல்ல.

அதுமட்டுமின்றி, ஜாதி வாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பு, வாக்காளர் கணக்கெடுப்பு போன்ற எப்பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், அனைத்து விதிகளையும் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us