/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்ஜாபூர் - ஹெப்பால் மெட்ரோ ஒப்புதல் அளிக்க தயக்கம் சர்ஜாபூர் - ஹெப்பால் மெட்ரோ பாதை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயக்கம்

ADDED : ஜூன் 10, 2025 02:27 AM
பெங்களூரு: கர்நாடக அரசு ஒப்புதல் அளித்து ஆறு மாதங்களாகியும், பெங்களூரின் சர்ஜாபூர் - ஹெப்பால் மெட்ரோ வழித்தடத்துக்கு, மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
பெங்களூரு மெட்ரோ நிறுவனம், பகுதி பகுதியாக மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்தி வருகிறது. சர்ஜாபூர் - ஹெப்பால் இடையே 38 கி.மீ., நீளத்திற்கு சிவப்பு வழித்தடம் அமைக்க, மெட்ரோ நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது. இதற்கு 28,405 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதையில் 11 உட்பட மொத்தம் 28 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மாநில அரசுக்கு அனுப்பியது. ஆறு மாதங்களுக்கு முன்பு, திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பின் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் திட்டத்துக்கான மதிப்பீடு மிகவும் அதிகமாக இருப்பதால் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
சர்ஜாபூர் - ஹெப்பால் இடையிலான மெட்ரோ பாதை திட்ட மதிப்பீடு செலவு இவ்வளவு அதிகமானது ஏன் என்ற விபரங்களை அளிக்கும்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை, பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.