தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாமதமாக வந்த ஊழியர்கள் நிற்க வைத்து சி.இ.ஓ., தண்டனை

தாமதமாக வந்த ஊழியர்கள் நிற்க வைத்து சி.இ.ஓ., தண்டனை

தாமதமாக வந்த ஊழியர்கள் நிற்க வைத்து சி.இ.ஓ., தண்டனை


ADDED : செப் 13, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: பள்ளியில் மாணவர்கள் தாமதமாக வந்தால், ஆசிரியர்கள் வெளியே நிற்கவைத்து தண்டிப்பதை பார்த்திருக்கிறோம். அலுவலக பணிக்கு தாமதமாக வந்த ஊழியர்களை, மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி, வாசலில் நிற்க வைத்தார்.

தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து அலுவலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், தினமும் அலுவலகத்துக்கு தாமதமாக வருகின்றனர். இவர்களால் பணிகள் தேக்கமடைந்துள்ளன. அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் வர வேண்டும் என, உயர் அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் பயன் இல்லை.

நேற்று காலையும் பலர், அலுவலக பணிக்கு தாமதமாக வந்தனர். இதனால் எரிச்சல் அடைந்த மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி கித்தே மாதவ விட்டல் ராவ், தாமதமாக வந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வாசலிலேயே சிறிது நேரம் நிற்க வைத்தார். அதன்பின் எச்சரித்து, உள்ளே அனுமதித்தார். சி.இ.ஓ.,வின் நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.

ஊழியர்கள் அலுவலக வாசலில் நின்றிருப்பதை, பொது மக்கள் தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, சி.இ.ஓ., கூறுகையில், “அலுவலக ஊழியர்கள், சரியான நேரத்தில் பணிக்கு வராமல், இஷ்டப்படி வருகின்றனர். இதனால் வெளியே நிற்க வைத்து எச்சரித்தேன். இனியும் அவர்கள் இதே போன்று நடந்து கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us