தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தமிழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 21ல் சான்றிதழ் வழங்கும் விழா

தமிழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 21ல் சான்றிதழ் வழங்கும் விழா

தமிழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 21ல் சான்றிதழ் வழங்கும் விழா


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமத்தின் சார்பில், தமிழ் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும், 21ம் தேதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பெங்களூரு சி.வி.ராமன் நகரில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணியாற்றும் தமிழர்கள், ஆண்டுதோறும், ‘டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம்’ நடத்துகின்றனர். டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமத்தினர், தமிழ் இணைய கல்விக்கழகத்துடன் இணைந்து, 2019லிருந்து இணையவழியில் தமிழ் கற்றுக்கொடுத்து வருகின்றனர். தமிழ் வகுப்பை ஐந்து பகுதியாக பிரித்து கற்பிக்கின்றனர்.

இந்த செயல்பாடு, கர்நாடகாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் தமிழ் கற்று உள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் 900க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கடந்த 2025 – 2026 கல்வியாண்டில் மட்டும், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்றனர்.

இவர்களில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 21ம் தேதி, சி.வி.ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., சமூக மண்டபத்தில் சான்றிதழ் வழங்கும் விழா, மதியம் 3:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us