தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் யானையை சீண்டிய வாகன ஓட்டி

சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் யானையை சீண்டிய வாகன ஓட்டி

சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் யானையை சீண்டிய வாகன ஓட்டி


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்: பண்டிப்பூரில் காட்டு யானை தாக்குதலில் இருந்து, இரு சக்கர வாகன ஓட்டி, நுாலிழையில் உயிர் தப்பினார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் பண்டிப்பூர் புலிகள் காப்பத்தில், குண்டுலு பேட் – சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

சாலையோரத்தில் ஒரு யானை சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த வாகன ஓட்டிகள், யானையை பார்க்கும் ஆர்வத்தில், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். அப்போது, ஒரு கார் ஓட்டி மட்டும் தொடர்ந்து, ‘ஹாரன்’ அடித்து கொண்டே வந்தார். இதனால் கோபம் அடைந்த யானை, வாகன ஓட்டிகளை நோக்கி ஓடி வந்தது.

இதை பார்த்த வாகன ஓட்டிகள், வாகனங்களை திருப்பி, தப்பினர். ஆனால் ஒரு வாகன ஓட்டி, தனது இரு சக்கர வாகனத்தை திருப்புவதற்குள் யானை, அவரின் முன் வந்ததால், வாகனத்தை விட்டு ஓடினார். யானையும் ஒன்றும் செய்யாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

அங்கிருந்த வாகன ஓட்டிகள், வேக வேகமாக வாகனத்தை ஓட்டி சென்றனர். யானையின் ஆக்ரோஷத்துக்கு காரணமான வாகனத்தின் பதிவு எண்களை, சில சுற்றுலா பயணியர் படம் பிடித்து, வனத்துறையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில், காரின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us