தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சோனியா புத்தகத்தை படித்தால் போதுமா? காங்., தலைவர்களை சாடிய எம்.பி., யதுவீர்

சோனியா புத்தகத்தை படித்தால் போதுமா? காங்., தலைவர்களை சாடிய எம்.பி., யதுவீர்

சோனியா புத்தகத்தை படித்தால் போதுமா? காங்., தலைவர்களை சாடிய எம்.பி., யதுவீர்


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ‘‘காங்., பார்லி., குழு தலைவர் சோனியா எழுதிய புத்தகத்தை படித்தால் மட்டும் போதுமா,’’ என, மைசூரு பா.ஜ., – எம்.பி., யதுவீர் சாடியுள்ளார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவியின் தத்துப்பிள்ளை என்று என்னை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். ஆமாம், நான் தத்து பிள்ளை தான். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அனைவரும் குடிமக்கள் தான். யாருக்கும் சிறப்பு இடம் இல்லை. அரசியல் செய்யும் போது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்க கூடாது.

கர்நாடக மக்கள், அரசியலில் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றனர். தொகுதியில் நிலவும் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டும். அதை விட்டு தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. மைசூரு எம்.பி.,யாக எனது பணியை சிறப்பாக செய்து வருகிறேன்.

நான் எந்த வேலையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். சோனியா எழுதிய புத்தகங்கள், காங்கிரஸ் கட்சியின் செய்தி தாள்களை மட்டும் படித்தால், காங்கிரஸ் தலைவர்களுக்கு சரியான தகவல் கிடைக்காது.

நாட்டிலும், மைசூரிலும் என்னென்ன வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன என்பதை அறிய அனைத்து நாளிதழ்களையும் படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us