ADDED : ஜூன் 06, 2026 11:32 PM

பெங்களூரு: சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. பெங்களூரின், ஆர்.வி.. கல்லுாரியின் தனிஷா கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ருஜன் இரண்டாவது, நிநான் வசிஷ்டா மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.
மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ். சி.இ.டி., தேர்வு முடிவை, நேற்று வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மருத்துவம், இன்ஜினியரிங் உட்பட, பல்வேறு கோர்ஸ்களில் அட்மிஷன் பெற, மாணவ, மாணவியர் சி.இ.டி., தேர்வு எழுதினர். தேர்வில், 2 லட்சத்து 92,782 மாணவர்கள் வெவ்வேறு கோர்ஸ்களில் அட்மிஷன் பெற, தகுதி பெற்றுள்ளனர்.
கர்நாடகாவின், 745 தேர்வு மையங்களில், ஏப்ரல் 23 மற்றும், 24ம் தேதிகளில், சி.இ.டி., தேர்வு நடந்தது. 23ம் தேதி இயற்பியல், வேதியல் தேர்வுகளும், 24ம் தேதி கணிதம், உயிரியல் தேர்வுகளும் நடந்தன.
ஏப்ரல் 22ம் தேதியன்று, பெங்களூரு, மங்களூரு, விஜயபுரா, பெலகாவியில் கன்னட மொழி தேர்வு நடந்தது. 3.30 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2 லட்சத்து, 92,782 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.இ.டி., தேர்வில், பெங்களூரின், ஆர்.வி., கல்லுாரியின் இன்ஜினியரிங் மாணவி தனிஷா கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ருஜன் இரண்டாவது, நிநான் வசிஷ்டா மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.
இன்ஜினியரிங் கோர்சுக்கு 2 லட்சத்து 82,603 பேர், பி.எஸ்சி.,க்கு 2 லட்சத்து 9,220 பேர், கால்நடை மருத்துவத்துக்கு 2 லட்சத்து 12,909 பேர், பி. பார்முக்கு 2 லட்சத்து 2,86,609 பேர், பி.எஸ்சி., நர்சிங்குக்கு 2 லட்சத்து 18,785 பேர், பி.என்.ஒய்.எஸ்.,க்கு 2 லட்சத்து 12,730 பேர், விவசாய கோர்சுக்கு 21,775 பேர், பி.வி.எஸ்சி., ஆய்வு பிரிவில் 21,838 பேர் த குதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
