/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சாமுண்டி மலை ஹிந்துக்களின் சொத்தல்ல! '
/
'சாமுண்டி மலை ஹிந்துக்களின் சொத்தல்ல! '
ADDED : ஆக 27, 2025 07:18 AM

பெங்களூரு : ''சாமுண்டி மலைக்கு அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் சென்று சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்யலாம். இது ஹிந்துக்களின் சொத்து அல்ல,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மைசூரு தசராவை 'புக்கர்' பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைக்க பா.ஜ.,வினர், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், பெங்களூரு விதான் சவுதாவில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
நாங்கள் மசூதி, கிறிஸ்துவ தேவாலயங்கள், ஜெயின் கோவில்கள், குருத்வாருக்கு செல்கிறோம். குருத்வார் செல்லும்போது யாராவது நம்மை தடுத்தார்களா? நாமும் அவர்களை தடுக்கவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த கோவிலுக்கும் செல்லலாம்.
ஹிந்துக்கள் பலர், முஸ்லிம்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் மற்ற மதத்தினருமாகவும் மதம் மாறி உள்ளனர். ஹிந்து சம்பிரதாயங்களை முஸ்லிம்கள் பின்பற்றவில்லையா? அயோத்தியில் ராமர் கோவிலில் ஹிந்துக்கள் மட்டும் வர வேண்டும் என்று ஏன் பலகை வைக்கவில்லை?
மத்தியில் பா.ஜ., அரசு உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து ஹஜ் குழு மற்றும் சிறுபான்மை துறைகளை ஏன் ஒழிக்கவில்லை? இதெல்லாம் அரசியல். நாம் மதச்சார்பற்ற நாடு. நமது அரசியலமைப்பு அனைவருக்கும் வாய்ப்பு, சுதந்திரம் அளித்துள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.