/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டி மலையில் தரிசன வரிசை மாற்றம்
/
சாமுண்டி மலையில் தரிசன வரிசை மாற்றம்
ADDED : ஜூலை 02, 2025 11:24 PM
மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் ஆஷாடா மாதத்தில், படிக்கட்டுகளின் வழியே வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த வரிசை அகற்றப்பட்டது. இனி கட்டணமில்லா தரிசனத்துக்கான வரிசையில் நின்று அவர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வார வெள்ளிக்கிழமையன்று படிக்கட்டுகள் வழியாக வந்த பக்தர்கள், அம்மனை தரிசிக்க நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்ததாலும், தர்ம தரிசனம், டிக்கெட் வாங்கியவர்கள் எல்லாம் விரைவில் அம்மனை தரிசித்து சென்றதாலும் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து, சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
படிக்கட்டுகள் வழியாக வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட தனி வரிசை அகற்றப்பட்டது. இனி ஆஷாடா வெள்ளிக் கிழமைகளில், தர்ம தரிசனம் வரிசையில் நின்று அம்மனை தரிசிக்கலாம்.
மேலும், அம்மனை தரிசிக்க லலித் மஹால் அரண்மனை மைதானத்தில் இருந்து இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.