தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு விமான நிலையத்தில் பயனர் கட்டணத்தில் மாற்றம்

 பெங்களூரு விமான நிலையத்தில் பயனர் கட்டணத்தில் மாற்றம்

 பெங்களூரு விமான நிலையத்தில் பயனர் கட்டணத்தில் மாற்றம்


ADDED : ஆக 22, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் பிற இடங்களுக்கு பயணிக்கும் பயணியரிடம் யு.டி.எப்., எனும், பயனர் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

யு.டி.எப்., கட்டணம் என்பது, விமான நிலைய பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயணியரிடம் வசூலிக்கப்படுகிறது.

பெங்களூரிலிருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்லும் பயணியரிடம் 550 ரூபாய்; வெளிநாடுகளுக்கு செல்வோரிடம் 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, 550 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும்; 1,500 ரூபாயிலிருந்து 997 ரூபாயாகவும் இந்திய விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் குறைத்து உள்ளது.

அதுபோல, நாட்டின் பல இடங்களிலிருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் பயணியருக்கு 125 ரூபாயும்; வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் 426 ரூபாயும் முதன் முறையாக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இந்த புதிய கட்டண விதிமுறை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us