தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2 மாதமாகியும் பாட புத்தகம் இல்லை நகல் எடுத்து படிக்கும் மாணவர்கள்

 2 மாதமாகியும் பாட புத்தகம் இல்லை நகல் எடுத்து படிக்கும் மாணவர்கள்

 2 மாதமாகியும் பாட புத்தகம் இல்லை நகல் எடுத்து படிக்கும் மாணவர்கள்


ADDED : ஆக 22, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடப்பாண்டு பள்ளிகள் துவங்கி இரண்டு மாதங்களாகியும், பெரும்பாலான அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு, 100 சதவீதம் புத்தகம் சென்றடையாததால், கிடைத்த புத்தகத்தை நகல் எடுத்து, மற்ற மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக துவக்கம், இடைநிலை பள்ளிகளின் மேலாண்மை வாரியங்கள் சங்க பொது செயலர் சசிகுமார் கூறியதாவது:

வழக்கமாக முந்தைய ஆண்டு மாணவர் சேர்க்கையை க ணக்கில் வைத்து, முதல்கட்ட மாணவர் சேர்க்கைக்கான புத்தகங்களுக்கு முன்பணத்தை, ஜனவரி மாதம் வழங்கி விடுவோம்.

இருப்பினும், கல்வியாண்டு துவங்கிய பின், மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற, இறக்கம் இருப்பது இயல்பு. அரசு கூறியபடி, முதல் கட்டமாக சேரும் மாணவர்களு க்கான புத்தகங்கள் வாங்க, 100 சதவீதம் முன்பணம் செலுத்திய பின்னரும், பெரும்பாலான அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை.

அதனால் இரண்டாம் கட்டமாக சேர்ந்த மாணவர்களுக்கான பணத்தை இன்னும் செலுத்தவில்லை. இதனால் கிடைத்த புத்தகத்தை வைத்து, நகல் எடுத்து வைத்து கொண்டு, மற்ற மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் தினம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது சிரமமாக உள்ளது.

அத்துடன், பாட புத்தகங்களுக்கு பணம் செலுத்திய பிறகும், தங்கள் குழந்தைகளுக்கு புத்தகம் வழங்காததால் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us