/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவையில் ஜூலை 27 வரை மாற்றம்
/
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவையில் ஜூலை 27 வரை மாற்றம்
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவையில் ஜூலை 27 வரை மாற்றம்
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவையில் ஜூலை 27 வரை மாற்றம்
ADDED : ஜூன் 13, 2025 11:17 PM
பெங்களூரு: 'எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி இடையேயான வாராந்திர விரைவு ரயில் சேவை, ஜூலை 5 முதல் 27ம் தேதி வரை, ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 07355: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில், ஜூன் 28 வரை ராமேஸ்வரம் வரை செல்லும் என்றும்; எண் 07356: ராமேஸ்வரம் - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி வாராந்திர ரயில், ஜூன் 29 வரை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் அனுமதியின்படி, ரயில் எண் 07355: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில், ஹூப்பள்ளியில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். ஜூலை 5 முதல் 26ம் தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதுபோன்று, எண் 07356: ராமேஸ்வரம் - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி வாராந்திர ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, ராமநாதபுரத்தில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:40 மணிக்கு எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி வந்தடையும். இந்த மாற்றம், ஜூலை 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை இருக்கும்.
ரயில் எண் 17327: ஹூப்பள்ளியில் இருந்து கொப்பால் மாவட்டம் குஷ்டகிக்கு, இன்று முதல் வழக்கம் போல் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, குஷ்டகிக்கு இரவு 7:00 மணிக்கு சென்றடையும். இதற்கு முன்பு 6:40 மணிக்கு சென்றடைந்தது.
அதுபோன்று எண் 17328: குஷ்டகி - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி ரயில், குஷ்டகியில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜூன் 19ம் தேதி முதல் 6:45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:40 மணிக்கு எஸ்.எஸ்.எஸ்.,ஹூப்பள்ளி சென்றடையும்.
பயணியர் வசதிக்காக ரயில் எண் 06539: பெங்களூரு எஸ்.எம்.வி.டி., - பீதர் ரயில் ஜூன் 15 முதல் 19 ம் தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:30 மணிக்கு பீதர் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ரயில் எண் 06540: பீதர் - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சிறப்பு ரயில், ஜூன் 16ம் தேதி முதல் 30 ம் தேதி வரை, சனிக்கிழமை, திங்கட்கிழமைகளில், பீதரில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சென்றடையும்.
6 மாதம் நீட்டிப்பு
ரயில் எண் 16595 / 16596: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கார்வார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு பஞ்சகங்கா தினசரி விரைவு ரயில், குனிகல்லில் நின்று செல்லும்.
எண் 16239 / 16240: சிக்கமகளூரு - யஷ்வந்த்பூர் - சிக்கமகளூரு தினசரி விரைவு ரயில், சம்பிகே சாலையில் நின்று செல்லும்.
எண் 16228: தலகுப்பா - மைசூரு தினசரி விரைவு ரயில், மல்லேஸ்வரத்தில் நின்று செல்லும்.
எண் 16315 / 16316: மைசூரு - திருவனந்தபுரம் வடக்கு - மைசூரு தினசரி விரைவு ரயில், மாத்துாரில் நின்று செல்லும்.
எண் 66587 / 66588: பெங்களூரு கன்டோன்மென்ட் - கோலார் - பெங்களூரு கன்டோன்மென்ட் மெமு ரயிலும்; எண் 66511 / 66512: மாரிகுப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம் மெமு ரயிலும்; எண் 66534: கிருஷ்ணராஜபுரம் - குப்பம் மெமு ரயிலும்; எண் 66529 குப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயிலும், மரலஹள்ளியில் நின்று செல்லும்.
எண் 66553: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - அசோகபுரம் மெமு ரயில், கிருஷ்ணதேவராயாவில் நின்று செல்லும்.
எண் 66519 / 66520: மாரிகுப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம் மெமு ரயில், தேவன்கொந்தியில் நின்று செல்லும்.
எண் 16521: பங்கார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், தேவன்கொந்தியில் நின்று செல்லும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இது தொடரும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.