தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கு 9 பேர் மீது குற்றப்பத்திரிகை

 ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கு 9 பேர் மீது குற்றப்பத்திரிகை

 ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கு 9 பேர் மீது குற்றப்பத்திரிகை


ADDED : பிப் 13, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு நிரப்ப எடுத்து சென்ற, 7.11 கோடி ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில், 'சஸ்பெண்ட' செய்யப்பட்ட கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரின் ஜே.பி.நகரில் உள்ள ஹெச்.டி.எச்.பி., வங்கியில் இருந்து, ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ள வங்கி கிளைக்கு, சி.எம்.எஸ்., என்ற நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் கொண்டு செல்லப்பட்ட, 7.11 கோடி ரூபாய், கடந்த ஆண்டு, 19ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த அன்னப்பா நாயக், அவரது கூட்டாளிகள் சேவியர், கோபி, ரவி, நவீன், நெல்சன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்னப்பா நாயக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெங்களூரு 56 வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கைதான ஒன்பது பேர் மீதும், 1,328 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us