/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் தேர் சாய்ந்தது
/
பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் தேர் சாய்ந்தது
ADDED : ஏப் 19, 2025 11:06 PM

தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழாவில், தேரின் மேல் பகுதி மட்டும் சாய்ந்து விழுந்தது. லேசான காயத்துடன் அர்ச்சகர் உயிர் தப்பினார்.
மங்களூரு, முல்கியின் பாப்பநாடு ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் பிரம்ம ரத உத்சவத்தை காண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
இந்தாண்டும் திருவிழா நடந்தது. தேரில் கோவிலின் அர்ச்சகர்கள் அமர்ந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு அம்மனின் தேர் பவனி நடந்தது.
நேற்று அதிகாலையில், தேரின் மேல் பகுதி சாய்ந்தது. இதனால், தேரின் அருகில் வந்து கொண்டிருந்த பக்தர்கள், அலறியடித்து ஓடினர். தேரில் அமர்ந்திருந்த அர்ச்சகர்களில் ஒருவர் மட்டும் காயம் அடைந்தார்.
தேரை ஆய்வு செய்தபோது, தேரின் முன்பக்க இடதுபுற சக்கர பகுதியில் கரையான் அரித்திருந்தது.
இதையடுத்து. சிறிய தேரை கொண்டு வந்தனர். அதில் அம்மன் விக்ரகத்தை வைத்து கோவிலுக்கு இழுத்துச் சென்றனர். பழுதான தேர், தார்பாலினால் மூடப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிலர் கூறுகையில், 'கோவில் நிர்வாக குழுவினர், விழா துவங்குவதற்கு முன்பே, தேரின் நிலை என்ன என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும்.
கரையான் அரித்திருப்பதை கண்டுபிடித்திருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது' என்றனர்.
வேறு சிலர், 'அம்மனின் கோபத்தால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதை சுட்டி காட்டவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது' என்றனர்.
� திருவிழாவின்போது, பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் தேரின் மேல் பகுதி சாய்ந்தது. � தேரின் கீழ் பகுதியை சுற்றி நின்றிருந்த பக்தர்கள்.

