sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

செக் போஸ்ட்

/

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்


ADDED : ஏப் 28, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலி குடங்கள்

பொன்னான நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்குது. டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை செய்வாங்களான்னு ஜனங்க எதிர்ப்பாக்குறாங்க. இதுக்கு தானே எம்.பி., நிதி, கல்லுாரி நிர்வாகம் முனிசி.,க்கு டேங்கர்களை வழங்கினாங்க.

இதனை நகர மக்கள் பயன்பாட்டுக்கு 'யூஸ்' செய்யாம, சும்மா துரு பிடிக்க வைத்திருக்காங்களே. ஒரு காலத்தில சகல வசதியுடன் இருந்த கோல்டு சிட்டி, இப்போ குடிக்க தண்ணீருக்கே வழியற்றுள்ளது.

காவிரி பிறக்கிற ஸ்டேட்ல, காலி குடங்கள் வீட்டுல. இதுக்கு எப்போ தீர்வு கிடைக்குமோ.

கிராமம், கிராமமாக குறை கேட்க அசெம்பிளிக் காரர் கூட்டம் நடத்துறாரு. அரசு திட்டங்கள் எல்லாம் அங்கு தான் ஓ.கே., ஆகுது. சிட்டிக்குள் குறை கேட்க வேணாமா.

சொந்தமில்லா வீடுகள்

கோல்டு சிட்டியில் 50 சதவீத நிலம், மத்திய அரசின் கோல்டு மைனிங் பகுதிக்கு சொந்த மானது. இங்கு ஐந்து தலைமுறை யா வாழ்கிறவங்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முகவரி எல்லாம் உண்டு. ஆனால், வாழ்வாதார வீட்டு மனை பட்டா கிடையாது. 30 ஆயிரம் வீடுகளில் வாழ்கிறவங்க, வீட்டு வரி செலுத்த தயாராக இருந்தும், வீட்டுரிமை இல்லாமல் இருக்காங்க. மக்கள் பிரதிநிதிகள் இதன் மீது அக்கறை காட்டலயே.

புதுசா தொழில் நகரம், போலீஸ் பயிற்சி மையம் எல்லாம் உருவாகப் போகுது. இந்த நகரத்தின் மதிப்பும் உயரப் போகுதுன்னு பேசுறாங்களே தவிர, குடியிருக்கும் வீடுகள் பிரச்னைக்கு யார் தான் தீர்வு காணப் போறாங்களோ.

வாரத்தில் 2 நாள் ஓய்வு

மண்வாரி தொழிற் சாலையில் தற்காலிக ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினாங்க. ஆனால் அது வேஸ்ட் ஆனது. அவர்களின் பிரச்னை பரிசீலனையில் இருக்கும் போதே, மாதத்தில் 26 நாட்கள் வேலை செய்து வந்தவங்கள, 22 நாட்களாக குறைச்சிட்டாங்களாம். இதனால, மாதத்தில் 3,200 ரூபாய் சம்பளத்தில் 'கட்' ஆகப்போகுதாம்.

வாரத்தில் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் கட்டாயம் ஓய்வு கொடுத்துட்டாங்கன்னு தற்காலிக ஊழியர்கள் சொல்றாங்க. மே தினம் கொண்டாடும் சங்கத்துக்காரங்களுக்கு தொழிற்சாலை நிர்வாக முடிவு 'ஷாக்' கொடுத்திருக்குது. இதுக்கும் சங்கம் ஒத்து போகுதா அல்லது வேறு விதமா துாண்டி விடுதான்னு உழைக்கிறவங்க சிரிக்கிறாங்க.

ரயில் பயணியர் அவதி

மஹா கும்பாபிஷேகம் காரணமாக 16 பெட்டிகள் கொண்ட சொர்ணா ரயிலில் 12 பெட்டிகளாக குறைச்சாங்க. கும்பாபிஷேகம் நிறைவுக்கு பிறகு வழக்கம் போல 16 பெட்டிகளாக ஆக்கப் படும் என்றாங்க. ஆனால், கும்பாபிஷேகம் முடிந்து, ஒரு மாதம் கடந்தும் கூட இன்னும் ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

மக்கள் பிரதிநிதிகளான செங்கோட்டைக்காரர், மாநில அசெம்பிளிக் காரர் ஆகியோர் மவுனமாக இருக்காங்களே என்று தினப் பயணியர் அடுக்கடுக்கான, பல வகையான வார்த்தைகளால் விமர்சிக்கிறாங்க.

இதுவே எலக் ஷன் நேரமாக இருந்திருந்தால், பல கட்சிகள் ஆஹா, ஓஹோன்னு போராட்டம் நடத்தி இருப்பாங்க. ஓட்டு அரசியலுக்கு வித்தையை காட்டியிருப்பாங்க. தினமும் அவதிப்படுறவங்க ஆட்டமோ திண்டாட்டம் தான்னு சொல்றாங்க.






      Dinamalar
      Follow us