sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

செக் போஸ்ட்

/

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்


ADDED : ஆக 05, 2025 07:14 AM

Google News

ADDED : ஆக 05, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏன் இந்த வெறுப்பு?

மு னிசி.,யில் தீர்மானம் நிறைவேற்றி, பி.எம்., சாலைக்கு 'நேதாஜி' பெயர் சூட்டி, வருஷம் 30 முழுசா முடிஞ்சு போச்சு. இதுக்காக ஸ்கூல் ஆப் மைன்ஸ் முதல் ரா.கேம்ப் வரை 5 கி.மீ., துார சாலையில் ஐந்து இடத்துல மார்பிள் கற்களால் செதுக்கி கல்வெட்டு வச்சாங்க. ஆனால் இதுவரையில் பெயர் அமலுக்கு வந்த பாடில்லை. இதே சாலையில் இருக்கிற முனிசி., அலுவலக முகவரியிலும் மாற்றப்படலை.

நாட்டை விட்டு வெளியேறிய இங்கிலீஷ் காரங்க பேர்ல இருக்கிற ரா.பேட்டை, ஆ.பேட்டை ஒ.டானியேல் சாலை எல்லாமே மாறாமல் இருக்கிறது. இது என்ன விந்தையோ.

முனிசி., ஆபீஸ் எதிரில் நேதாஜி பேர்ல இருக்கிற பூங்கா பெயர் பலகை அழிந்து பல வருஷம் ஆகுது. அதை புதுப்பிக்காம, துரு பிடிக்க வெச்சிருக்காங்க.

அதே பூங்காவில் அவரோட சிலை இருக்கு. பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் என எதுக்குமே மாலை அணிவிக்க முனிசி.,காரங்களுக்கு மனசே வருவதில்லை. என்ன வெறுப்போ.

பணிவே ஆயுதம்

எ தற்கும் தலைகுனியாதவர் நம்ம மாநில சி.எம்., என கை கட்சிக்காரங்க பெருமை பேசுறாங்க. எதுக்குமே அசராத அவர், தன்மானம் உள்ளவர். முதல்வர் பதவியை விட்டு தர மனம் இல்லாதவர் என்கிறாங்க. அவர் பதவியை பறிச்சா, கட்சிக்கே ஆபத்துங்கிறதை மேலிடம் வரை பத்த வெச்சிருக்காங்க.

இதை புரிஞ்சு கொண்ட எதிர்ப்பு அணியின் பட்டியலில் இருந்த, சில ஆளும் கட்சி அசெம்பிளி காரங்க, முதல்வருக்கு புகழாரம் சூட்ட தொடங்கிட்டாங்க.

கோல்டு சிட்டி அசெம்பிளி மேடமும், முதல்வரை தன் தந்தை ஸ்தானத்தில் மதித்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றதாக படங்களை பார்க்க முடிந்தது.

ஆனால், மேடம் டி.சி.எம்., கோஷ்டியில் இருப்பதாக 'கும்பல் ஒன்று' முதல்வரிடம் போட்டுக் கொடுத்திருத்தாங்க. இதை அதை ஒரே ஷாட்டில் கவுத்து, எதிரிங்களுக்கு மேடம், 'ஷாக்' கொடுத்திட்டாங்களாம். பணிவுக்கு பவர் ஜாஸ்தியாமே.

வேலி இல்லா நிலம்

ரா .பேட்டை ஒன்றாவது கிராஸ் பகுதியில் உள்ள மாநில மொழி சங்க கட்டடம் பக்கத்தில் உள்ள காலி நிலத்தை தனி நபர் ஒருத்தரு ஆட்டைய போட, ஜாதி சங்கத்து பேர்ல சொந்தம் கொண்டாட பார்த்தார். ஆனால் அது முனிசி.,யின் சொத்து என்பதை நீதிமன்றம் மூலம் மீட்டாங்க.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காலி நிலம், எதுக்குமே பயன்படுத்தாம விட்டு வெச்சிருக்காங்க. இது முனிசி.,யின் சொத்து என வேலி அமைக்கல; பெயர் பலகையும் வைக்கல. வேறென்ன தான் செய்ய உத்தேசமோ.

அந்த காலி நிலத்தை, வீடற்ற ஏழைகளுக்கு மனை வழங்குவாங்களா, வணிக வளாகம், திருமண மண்டபம் அமைத்து வருமானம் வரும்படி செய்வாங்களா. இதனை மாபியா கும்பல் சுருட்டாமல் இருந்தால் சரி.

'ஆட்டை

' தடுப்பாங்களா?

ஆ .பேட்டை செக்குமேடு திடல் என்ற இடத்தில் பூங்கா அமைப்பதாக பல வருஷத்துக்கு முன்னாடி சொன்னாங்க. இங்கு குறைந்த பட்சம் 400க்கு 300 அடி காலி நிலம் உள்ளது. இதன் பேரில் பலர் சொந்தம் கொண்டாடி வருவதாக தெரியுது.

எல்லாம் அறிந்த முனிசி., நிர்வாகம் எதுக்கு மவுனமாக இருக்காங்க. அது யாருக்கு சொந்தமான இடம், முனிசி., சொத்து என்றால் எதுக்காக அதனை கையகப்படுத்தாம விட்டு வெச்சிருக்காங்களோ. இதுவும் கூட பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம்னு அப்பகுதியினர் சொல்றாங்க.

நிலம் விலை எக்கச்சக்கமாக உயருவதால் அதனை காப்பாற்ற முனிசி., முன் வருமா. போனால் போகட்டும் என கண்ணை மூடிக்கிடுவாங்களா.






      Dinamalar
      Follow us