இதுதான் பாலிடிக்சா?
ச மீபத்தில் தங்க மண்ணில் நடந்த ஊர்வலத்தில், பூக்காரங்களும், கைக்காரங்களும் சட்டமேதை படத்துடன் கூடிய நீலக்கொடியை போர்த்தியும், கையில் ஏந்தியும் ஜெய்பீம்... ஜெய்பீம்... என்று ஊர்வலம் வந்தாங்க. கட்சி கொடி வைத்திருந்தவர்கள் மிக மிக குறைவு தான்.
எதிர்க்கால ஆதாயத்துக்காக ஊர்கோலம் போனாங்க. இவங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், பெமல் தொழிற்சாலை அருகே சமுதாய பவன் கட்டுவதாக, 20 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினாங்களே... அது என்னாச்சுன்னு யோசிக்க இவங்களுக்கு நேரமில்லையா அல்லது ஞாபகம் வரலையா.
சமூக நலத்துறை மூலம், குறிப்பிட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் அலுவலகம், இன்னும் கூட ப.பேட்டையில் தான் இருக்குதே. இதை கோல்டு சிட்டியில் ஏற்படுத்த சிந்திக்கலையா.
பிரச்னையில் கோல்ப்
இ ங்கிலீஷ் காரங்க, கோல்ப் ஆடுவதற்கு ஏற்படுத்தின மைதானத்தை, கோல்டு சிட்டி வீரர்களும் பயன்படுத்தி வந்தாங்க. அந்த மைதானத்தை வேறு திட்டத்துக்கு பறிக்க போறாங்களாம். இதை தடுக்க நீதிமன்றத்தில் சில வீரர்கள், ரிட் மனு தாக்கல் செய்திருக்காங்க. ஆனால், அந்த மைதானத்தில் வரலாற்று அருங்காட்சியகம் ஏற்படுத்த அசெம்பிளிக்காரர் பூஜை போட்டுட்டாரு. இந்த வேலை நடக்குமா, கோர்ட் என்ன சொல்லப்போகுதோ.
கனவு நனவாகுமா?
சீ னிவாசப்பூரில், 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதாக சொல்லி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு. சொன்னவரு யாருன்னு எல்லாருக்கும் தெரியும். இதே போல அவரது அரசியல் வாரிசு, 'தொழிற்பூங்கா' தான் தனது கனவு திட்டம்னு சொன்னாரு. இதற்காக 1,000 ஏக்கர் நிலத்தின் மீது கண் வச்சாங்க. ஆனா, அந்த திட்டத்திற்கு வடிவம் கொடுக்கல. நைனாவோட கனவு தான் ஈடேறல; அவரோட மகளின் கனவாவது நனவாகுமா.
எல்லாருமா?
கோ ல்டன் தொகுதிக்குள், 'சூப்பர் மேன்' வருவதாக பம்மாத்து காட்டுறாங்க. ஒரு தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ., ஆனா, கோல்டனில் புதுசு புதுசா நிறைய பேரு முளைக்கிறாங்க. ஒரு குடும்பத்துல எல்லாருமே, கொடி துாக்குனா எப்படி. மத்தவங்களுக்கும் நாற்காலியில உட்கார ஆசை வராதா. வாய் இருக்குன்னு எதை வேணுமுன்னாலும் பேசலாமா. அரசியல் களம் அப்படி ஆகி விட்டது.

