தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : பிப் 11, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரே குடும்பத்துக்கு சீட் டவுட்?

பூ கட்சியில் தலா ஒரு முறை மகன், தாய்க்கும், இருமுறை அவரின் மகளுக்கும் அசெம்பிளி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கினாங்க. அடுத்து இவங்க குடும்பத்தினருக்கு சீட் கிடைக்குமாங்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏன்னா, இருமுறை, 'கை'யிடம் தோற்றனர். கையிடமே கை நீட்டி விட்டதாக பலவித பேச்சும் நகரில் உலா வருகிறது.

எனவே, 'மாஜி' பூக்கார செங்கோட்டை முனி, தனது மனைவிக்கு கோல்டு சிட்டியில் அசெம்பிளி சீட் பெற முயற்சிக்கிறாரு. நகருக்குள் கட்சிக்காரர்களுக்கு தரிசனம் செய்ய வைத்தாரு. பலரை அறிமுகம் செய்ய காவி மாநாட்டில் பங்கேற்க வைத்தாரு. கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை செய்ய தொடங்கிட்டாங்களே என்ற கிலி, 'மாஜி' அசெம்பிளிக்காரருக்கு ஏற்பட்டிருக்குது.

முன்னர், கூட்டுறவுச் சங்க தேர்தலில் கோலாரின் கைக்கார அசெம்பிளிக் காரர் போட்டியின்றி தேர்வாக, பூக்கார வேட்பாளரான கோல்டு சிட்டி மாஜி அசெம்பிளிக்காரரின் மகனான வேட்பாளரை வாபஸ் பெற வைத்தாங்க. அந்த தில்லாலங்கடி வேலை பூ கட்சிக்குள் சலசலப்பு இருந்ததை எப்படி மறப்பாங்க.

இரவில் கோப்புகள் பைசல்?

மு னிசி., ஆணையராக இருந்தவரை வாலண்டரியாக இடமாற்றம் செய்ய வச்சாங்க. அவர் வெளியேறுவதற்கு முன், கடைசி மூன்று நாட்களில் தேங்கி இருந்த பல கோப்புகளுக்கு நள்ளிரவிலும் கையெழுத்திடப்பட்டு பல, 'எல்' சுருட்டி கொண்டதாக முனிசி., வட்டாரத்தில் சுழன்றது.

மந்திரி ஒருத்தருக்கு 30 'எல்' கொடுத்து தான் கோல்டு சிட்டி முனிசி.,யில் பதவிக்கு வந்தவரை ஆறே மாதத்தில் வெளியேற வைத்ததால், முதலுக்கே மோசமானதை ஈடுகட்ட தமது கைவரிசையை அவர் காட்டிட்டாராம். அவர் மீது முனிசி., உயர் மட்ட விசாரணை நடக்க போகுதாம்.

வெளியேறும் கைகள்

கை கட்சி முனிசி., உறுப்பினர்கள் சிலர், பூ வாசத்தில் மயங்கிட்டாங்க. அதில் ஒருவர் காவி ஊர்வலத்தில் காவி துண்டு அணிந்து வெளிப்படையாக அவரின் சுயரூபத்தை காட்டி விட்டார். கைவசம் இருந்த ஒரு விக்கெட் வீழ்ந்து விட்டது. ஒட்டும், உறவும் வேண்டாமென கை கூடாரத்தில் உள்ளிருந்தவாறு, சீனியர்கள் சிலர் நேரம் வரும்போது காலை வாரிட காத்திருக்காங்க.

தங்களின் பலத்தைக் காட்ட 'வெயிட் அண்ட் சீ' என்கிறாங்க. அரசியல் அத்தியாயத்தை முடிக்க பள்ளம் வெட்டப்போறாங்களாம். பவரில் இருப்பதால் மேடம் விசிறிகளாக ஆதாயத்துக்கு வந்த சிலர் கூட முனிசி., தேர்தலுக்கு வார்டு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரட்டும். அதன் பின்னர் உடன் இருப்பதா, வெளியேறுவதா என்று காத்துகிட்டு இருக்காங்க.

மந்திரிக்கு என்ன பங்கு?

கே பினட் அமைச்சர் தகுதியில் சி.எம்., அரசியல் செயலர் உள்ளார். அவரது வருகையை முன்கூட்டியே தகவல் கொடுப்பது தான் வழக்கம். ஆனால், நேற்று நகராட்சி துறை மந்திரி வந்த போது, முன் அறிவிப்பு இல்லாமல் அவருடன் சி.எம்., செயலர் வந்தாரு.

மந்திரிக்கு கோல்டு சிட்டி பற்றி முழுசா தெரியுமோ... தெரியாதோ, மண்ணின் மைந்தரான சி.எம்., செயலருக்கு எல்லாமே அத்துப்படி என்பதால், திடீர் விசிட் சிலருக்கு வியப்பா போச்சு ; கலக்கம் ஆச்சு.

புல்லு மார்க்கெட் கடைகள் இடிப்பின் பின்னணியில் மறைந்துள்ள தகவல்கள் வெளிவர உண்மை கண்டறியும் குழுவை அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே இடத்தில் நேற்று மந்திரி எப்படி அடிக்கல் நாட்டினார்.

மந்திரிக்கு, இதில் எவ்வளவு பங்கு என்ற விமர்சன ரீல் ஓடிக் கொண்டிருக்குது. மந்திரியின் தந்திர வேலையில் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையும் கண்துடைப்பா மாறிடுமோ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us