sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஏப் 02, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 03:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

யாருக்காக தாரைவார்ப்பு?

மா நிலத்தின் முதல் சி.எம்., நினைவரங்கம் ஏற்படுத்த, அவரோட சொந்த கிராமத்தில் 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கினாங்க. இதன் பூமி பூஜையில் மாநில மந்திரி, மாவட்ட எம்.பி., என டாப் லீடர்கள் பங்கேற்றாங்க. 10 ஆண்டுகள் கழிந்தது தான் மிச்சம்; அந்த இடத்தில் ஒரு சின்ன கொட்டகை கூட அமைக்கல.

அவரின் வீட்டுக்கு நாட்டின் முதல் பி.எம்., கூட ஓய்வெடுக்க சென்றதாக பெருமை பேசுறாங்க. ஆனால் அங்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தை குழித்தோண்டி புதைச்சிட்டாங்களா. நகரின் முக்கிய பகுதியான ரா.பேட்டையில், வலுவாக இருந்த பழைய சானிடரி போர்டு கட்டடத்தை இடித்து தரை மட்டமாக்கினாங்க. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை ஒரு ஜாதி சங்கம் பேரில், முதல் சி.எம்., நினைவகம் கட்ட நிலம் ஒதுக்கி கொடுத்தாங்களாம். அப்போ, முதல் சி.எம்., வாழ்ந்த இடத்தில் ஒதுக்கின நிலம் என்னானது. பூமி பூஜை போட்டவங்களுக்கு ஞாபகம் வரலையா.

அந்த கிராமத்தின் பூமி பூஜையில் பங்கேற்றவங்களே, ரா.பேட்டையில் முனிசி.,யின் 'பிரைம் பிராபர்ட்டி'யில் போடப் பட்ட பூமி பூஜையிலும் இருந்தாங்களே. இவங்க என்ன சொல்ல போறாங்க. ஒரு ஜாதி சங்கம் பேரில், யாருக்காக நிலம் விற்பனை செய்யப் பட்டது. இதுக்காக எத்தனை 'எல்'கை மாறினது. இதே போல் கோல்டு சிட்டியில் 110 சுதந்திர போராட்ட தியாகிகள் இருக்காங்களே; அவங்களுக்கு 30×40 அடி நிலமாவது சிட்டியில் தருவாங்களா.

ராணுவத்தில் உயிர்நீத்த கோல்டு சிட்டி தியாகிகள் நினைவை அனுஷ்டிக்க இதுவரை என்ன செய்தாங்க. இது மண்ணின் மைந்தர்களின் கேள்வியா இருக்குது.

ஆப்பு வைப்பாரா?

பொ ன் விளையும் நகரின் தென் கிழக்கு பகுதி ஆந்திர மாநிலம் குப்பம் சாலையில் 10 ஏக்கரில் 'வார சந்தை' அமைக்க பல வருஷத்துக்கு முன்னாடி அரசு நிலம் ஒதுக்கினாங்க. இதுக்கு நிதியாக பல 'எல்' தந்தாங்க. அதில், ஷெட், பிளாட்பாரம் அமைச்சதோடு அதன் வேலை முடிந்துப் போச்சு.

அந்த 10 ஏக்கர் நிலத்தையும் சிலர் ஆக்ரமிப்பு செய்திருப்பதாக கிராமத்து வாசிகள் குறை சொல்றாங்க. இதன் பேரில் கவனம் செலுத்த வேண்டிய ஆபீசரு நமக்கென்ன போச்சுன்னு கம்முனு இருக்காரோ. சந்தைக்கான இடத்தில் வார சந்தை ஏற்படுத்தாமல், நெடுஞ்சாலையில் வியாபாரம் செய்து வராங்க. இதனால் அங்கு டிராபிக் தொல்லை மட்டுமல்ல வம்பு வழக்குகள், தகராறுகள் நடப்பதும் வழக்கமா போச்சு.

வார சந்தை இடம் ஜனங்க பயன் பாட்டுக்கு எப்போ வருமோ. அரசியல்வாதிகளின் பின் பலத்தில்தான் முறைகேடுகள் நடப்பதா சொல்றாங்க. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் 'சர்ப்ரைஸ் விசிட்' செய்வாரா. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆப்பு வைப்பாரா.

வீட்டு மனைகள் கிடைக்குமா?

கோ ல்டு சிட்டி தொகுதியில் இதுவரை வீடற்ற, நிலமற்றவர் எத்தனைப் பேர் என்ற கணக்கெடுப்பை ம.அரசோ, மா.அரசோ இதுவரை எடுத்ததா தெரியல. எடுத்திருந்தா அதன் விபரம் வெளிப்படையா உண்மை எப்போ வெளிவரும்.

கிராமத்தினருக்கு கிடைத்து வரும் சலுகைகள் போல சிட்டியில் வாழ்பவர்களுக்கு கிடைத்த பாடில்லை. சிட்டிக்குள் வீடற்றவர்களின் விண்ணப் பங்களை 35 வார்டுகளில் தேர்தல் நேரத்தில் மூட்டைகளில் கட்டி எடுத்து போனாங்க. அந்த விண்ணப்பங்களுக்கு இப்போ உயிர் இருக்குதா; இல்லையா.

இருபது ஆண்டுகளில் இதுவரை கோல்டு சிட்டியினர் எத்தனை பேருக்கு தான் அரசின் இலவச வீட்டு மனைகள் கிடைத்தது; லிஸ்ட் ஒட்டப்படுமா. மாஜி ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கின வீட்டு மனைகளை கூட குப்பை கிடங்காக மாற்றினதை தானே காண முடிஞ்சுது.

உலோக சிலை எப்போது?

அ ரசு விழாவாக சட்டப்பிதா ஜெயந்தியை கொண்டாடுவது பற்றி ஜாதி தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்காங்க. அந்த கூட்டத்தில் பங்கேற்றவங்க, சட்டப் பிதா நினைவு பவன் கட்டப் படும் இடத்திலேயே ஜெயந்தி விழா நடத்தனும்னு அழுத்தம் கொடுத்து இருக்காங்க. ஆனால், அந்த இடம் மாநில அரசுக்கு சொந்தமானதா, மத்திய அரசின் சுரங்கத் துறைக்கு சொந்தமானதா என்று, வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதை எதுக்கு மூடி மறைக்க வேணும்.

பவன் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு, அங்கு விழா நடத்தலாம்னு வாயை பொத்த வைத்திருருக்காங்க. அப்படியானால் சட்டப் பிதா நினைவு பவன் எங்கு எப்போது அமையப்போகுது என்பதில் தெளிவில்லையே. முனிசி., ஆபீஸ் வளாகத்தில் உள்ள சட்டப் பி தா சிலையை உலோக சிலையாக மாற்ற எடுத் த தீர்மானம் என்னானது. அதற்கு ஒதுக்கிய நிதி என்ன ஆச்சு. பணி எப்போது ஆரம்பித்து, எப்போது முடியும். இதை கேட்க மறக்கலாமா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us