sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஏப் 04, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இரண்டு தொகுதிகள்?

ந கரம், கிராமம் என கோல்டு சிட்டி தொகுதியை இரண்டு தொகுதிகளாக பிரிக்க போவதாக, அரசியல் வட்டாரத்தில் புது கதைகள் பரவுது. அதில் ஜாதி ஒதுக்கீடுபடி நகரத் தொகுதியில், பெரும்பாலும் மண்ணின் மைந்தர்கள் போட்டியிட வாய்ப்பே இல்லாதபடி உள் ஒதுக்கீடு கிடைக்க ரகசியமா உள் வேலை நடக்குதாம்.

இது அமலுக்கு வந்தால், கோல்டு சிட்டியில் மண்ணின் மைந்தர்களா இருக்கிற ஒரு அரசியல் கட்சித் தலைவரும் போட்டியிட வாய்ப்பே இருக்காது என்ற தகவல் தான் நகரின் அரசியல் வட்டாரத்தை உலுக்குகிறது. இது யாருடைய வசதிக்கான ஏற்பாடோ.

கிராமத்தின் 160 கிராமங்களை சேர்த்து கோல்டு சிட்டிக் காரங்க அசெம்பிளிக்குள் நுழைய விடாமல் தடுத்தது யார். அதே நபரின் உள்வேலையாக தான் கோல்டு சிட்டி தொகுதியை ரெண்டு தொகுதியாக பிரித்து, அந்த ரெண்டிலுமே தமது குடும்ப வாரிசுகளுக்கு தொகுதியை சொந்தம் ஆக்க போவதாக வதந்திகள் பரவுது.

கோல்டு சிட்டிக்காரங்க அசெம்பிளிக்கு செல்ல ஆசைப் படும் கனவுகள் என்னாவதோ.

பிடில் வாசிக்கும் தலைவர்கள்

கோ ல்டு மைன்சுக்கு உட்பட்ட வீடுகளை முனிசி.,யில் சேர்க்க போறாங்களாம். அதிலும் 3,000 வீடுகளுக்கு மட்டுமே பட்டா தருவதாக சொல்றாங்க. மீதியுள்ள 12 ஆயிரம் வீடுகள் பற்றி மக்கள் தலைவர்கள் என்ன செய்ய போறாங்களோ. ரோமாபுரி எரிந்தப்போ மன்னர் பிடில் வாசித்தது போல இருப்பாங்களோ.

செங்கோட்டையில், அசெம்பிளியில், பேசி தீர்க்க வேண்டியவங்க ஏதாச்சும் முயற்சி எடுத்தாங்களா அல்லது கிணற்றில் விழுந்த கல்லாக இருக்கிறதா. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய போறாங்களா.

ஐந்தாறு தலைமுறையாக வாழ்ந்தவங்க வீடு சொந்தம் ஆகாமல் இருப்பதால், அதனை எந்த நேரத்திலும் இடித்து தரை மட்டம் ஆக்கிடு வாங்களோன்னு அச்சம் அலை பாயுது.

பட்டினி போடலாமா?

எ ரிவாயு கிடைக்காததால் நகரில் ஆட்டோக்கள் ஓட்டம் குறைந்து போயிருக்கு. காஸ் விற்பனை செய்யும் பங்க்குகளில் திடீரென கட்டணம் உயர்த்தி விட்டதால் டிரைவர்கள் பலமாக தகராறு செய்ததால் 'காஸ் நோ ஸ்டாக்' என்று கூறி விற்பனை செய்யாமல் மூடி வெச்சிருக்காங்கன்னு ஒரு தரப்பில் சொல்றாங்க.

டாப் 'ஏ' சிட்டியில் எல்லாம் காஸ் வினியோகம் பற்றாக்குறையே இல்லை. ஆனால், கோல்டு சிட்டியில் வணிக 'காஸ்' ஏன் பதுங்கி இருக்குதோ. ஏற்கனவே, மீட்டர் இல்லாமல் ஓடும் ஆட்டோக்களில் தலைக்கு 5 ரூபாய் கட்டணம் உயர்த்தினாங்க. இருப்பினும், காஸ் இல்லாமல் ஆயிரம் ஆட்டோக்களுக்கும் அதிகமாக அவரவர் வீடுகளில் துாங்குகிறது. பைனான்ஸ் கம்பெனியில் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், தினமும் செலுத்த வேண்டிய தொகைக்கு எப்படி சமாளிப்பதோன்னு வருத்தப் படுறாங்க. எங்கோ நடக்கிற யுத்தத்துக்கு இங்குள்ள ஆட்டோ டிரைவர்களை பட்டினி போடலாமா?

ஊர்க்குருவிகள் கூச்சல்

மு னிசி., வளாகத்தில் உள்ள 'சட்டப் பிதா'வின் சிமென்ட் சிலை விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிச்சாங்க. தீர்மானம் நிறைவேற்றி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினாங்க. டெண்டர் விட்டு ஒருவருக்கு கான்ட்ராக்ட் கொடுத்தாங்க. ஓராண்டு முடிந்துப்போயும் அந்த வேலை முடியல.

சட்டப் பிதா ஜெயந்தியை அரசு அலுவலகங்கள், அனைத்து கட்சிகள், பொது நல அமைப்புகள் 'ஊர் ஹப்பா'வாக கொண்டாடுறாங்களே தவிர, முனிசி., காம்பவுண்டில் உள்ள சிலைக்கு ஒதுக்கிய பணம் என்ன ஆனது.

டெண்டர் எடுத்த கான்ட்ராக்டரை ஏன் பிளாக் லிஸ்ட்டில் போடல. கான்ட்ராக்டர் ஒருவரின் பினாமி என்பதால் அவர் மீது ஆக் ஷன் எடுக்கலையோ அல்லது ஒதுக்கிய பணம் யாராவது விழுங்கி ஏப்பமிட்டாங்களா.

எதுதான் உண்மை என ஊர்க் குருவிங்க கூச்சல் போடுது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us