sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஏப் 05, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

யாருடைய பாராட்டு!

கோ ல்டு சிட்டியில் காக்கி சட்டைக்கார ஆபீசருக்கு, சி.எம்., கோல்டு மெடல் கிடைச்சிருக்கு. பெருமையாக பலர் பாராட்டுறாங்க. அவரோட படத்துடன் டிஜிட்டல் பேனரையும் வைத்து குஷிபடுத்தி இருக்காங்க.

சட்ட விரோத செயலில் ஈடுபடாதவங்க; போலீசில் வழக்கு இல்லாதவங்க, சக காக்கி சட்டைக்காரர்கள் சேர்ந்து பேனர் வைத்து பாராட்டி இருந்தால் ஓ.கே...! ஆனால், பேனர் வைத்தது யாருங்க.

ஆ.பேட்டை, ரா.பேட்டையில் கிரிமினல்களை அடக்கி ஒடுக்கின இவரை, கிரிமினல் வழக்குகள் அதிகமா இருக்கிற ப.பேட்டைக்கு இடம் மாற செய்வாங்களான்னு, அங்கிருந்து சிலர் குரல் கொடுக்குறாங்க. சீக்கிரமா அவரை கோல்டு சிட்டியில் இருந்து வெளியேற்றிடுவாங்க போல.

ஆபீசர்கள் 'ஆப்சென்ட்'

ஊ ழல், முறைகேடு விவகாரங்களை விசாரிக்க, லோக் ஆயுக்தா ஆபீசர்கள் கோல்டன் சிட்டி முனிசி., ஆபீசுக்கு வருகிற தகவல் கிடைத்து, முக்கிய ஆபீசர்கள் ஒருத்தரும் முனிசி., ஆபீசுக்கு ஆஜர் ஆகல. வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நிதித்துறை, ஆபீசர்களுக்கு ஒரே நேரத்தில் அப்படி என்ன வேலையோ. வேறொரு நாள் வந்து முனிசி ஆபீசர்களை கவனித்து கொள்வதாக லோக் ஆயுக்தாவினர் சொடுக் போட்டு வெறுப்போடு கோபமா திரும்பிட்டாங்க.

பூங்காக்கள், கழிப்பறைகள், தெருவிளக்குகள் என, பல விபரங்களில் நடந்த தில்லுமுல்லுகள் பற்றி, 'மாஜி' தலைவர் ஒருவர் அளித்த ஊழல் புகாரால் தான், லோக் ஆயுக்தா ஆபீசர்கள், பழைய கோப்புகளை கிளற போறதா தகவல் கசிந்திருக்குது.

என்னவானது இறைச்சி கூடம்?

கோ ல்டு சிட்டி உ.பேட்டை இடுகாட்டில், இறைச்சி கூடம் கட்ட, '15 எல்' பில் கொடுத்தாச்சாம். ஆனால், இதை ஒரு சமுதாய மக்கள் கடுமையாக எதிர்த்தாங்க. இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் புனித இடத்தை, வியாபார இடமாக மாற்றுவதா என, சரமாரியாக கேள்வி எழுப்பினாங்க. இடுகாட்டில் கசாப்பு செய்வது, கால்நடைகளின் இறைச்சிகளா, அல்லது மனித மாமிசமா எப்படி தெரிந்து கொள்வது என்றும் பலர் விமர்சனம் செய்தாங்க.

இறைச்சி கூடத்தை ஊருக்கு ஒதுக்கு புறமாக மாற்றுவதாக திட்டம் போட்டவங்களுக்கு, இடுகாடு தான் அதற்கு ஏற்ற இடமாகுமா. கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இடுகாட்டில் கட்டடம் தான் உருவானது. ஆனால், இறைச்சி கூடம் திட்டத்தை இடுகாட்டில் போட்டு புதைச்சிட்டாங்களோ...

இந்த திட்டத்தை ஏற்படுத்தினது ஆளும் கட்சி. எதிர்த்ததும் கூட ஆளும் கட்சியினரே. எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்தன. உட்கட்சி சீற்றத்தால் கைகட்சியில் விரிசல், பிளவுகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

தொழிலாளர் துறையில் மோசடி

அ மைப்பு சாரா தொழிலாளர்கள் பெயரில் சங்கம் அமைத்து, சில பேர் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து வருவது அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதற்கு ஆபீசர்களே துணை போறாங்களாம். உழைக்கிறவங்களுக்கு அரசு சலுகைகள் போய் சேரலையாம். ஆனால், சில இடைதரகர்கள் புகுந்து கொள்ளையடித்ததாக ஆதாரங்களை திரட்டி இருக்காங்க.

இது சம்பந்தமாக விரைவில் இப்பிரச்னை பூதாகரமாக வெடிக்கப் போகுது. அதை, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அடக்க பாக்குறாங்க.

கோல்டு சிட்டி, தாலுகா அலுவலகத்தில் இதற்கான அலுவலகம் இருக்கிறதா, இல்லையா. யார் ஆபீசர்னு ஜனங்க பார்க்கனுமாம்.

அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் உறுப்பினராக என்ன செய்யனும். அரசுக்கு கட்டணம் எவ்வளவு செலுத்த வேணும்னு கேட்கிறாங்க. 2025--26ம் ஆண்டின் அரசு சலுகைகள் பெற்ற பயனாளிகள் பட்டியலை வெளிப்படையாக அறிவிப்பாங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us