sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 08, 2026 ,சித்திரை 25, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 செக் போஸ்ட்

/

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மே 08, 2026 12:57 AM

Google News

ADDED : மே 08, 2026 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோஷ்டி சிக்கல்

மு னிசி.,யில் குடிநீர் பிரச்னை தீர நடந்த கூட்டத்தில, அரசு ஆபீசர்களும் மக்கள் குறை கேட்க பங்கேற்றாங்க. கை கட்சியின் கவுன்சிலரா இருந்த ஒருத்தர், சுரங்க குடியிருப்பு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதை தெரிவிச்சாரு. குறிப்பா, புல்லன்ஸ் வார்டு பகுதியில, ஜனங்க குடிநீருக்காக பல மாதங்களா தவிக்கிறாங்க .

குடிநீருக்காக போராட்டமும் நடத்த போவதாக 'பஞ்ச்' கொடுத்தாரு. இதற்கு அதிகாரிங்க பதில் தராமல் மவுனமாக இருக்க, அசெம்பிளிக்கார மேடம், 'போராட்டம் நடத்த போவதா சொல்றீங்களே... எப்போ எங்கே நடத்த போறீங்க'ன்னு கிண்டல் செய்தாராம். அசெம்பிளிகாரரும், போராட்டம் நடத்துவதாக சொன்னவரும் கை கட்சிக்காரர்கள் தான். 'மாஜி' கவுன்சிலர், அசெம்பிளிக்காரரின் கிண்டலால் அசிங்கப்பட்டு, கோபம் கொப்பளிக்க, 'நான் ஒண்ணும் ஒத்தை ஆளுன்னு நினைக்க வேணாம். இங்கேயே இப்பவே, 300 பேரை திரட்டி போராட்டம் நடத்த முடியும்னு சவால் விட்டாரு.

ஆபீசர்கள் பதில் அளிக்காமல், அசெம்பிளி மேடமே பதில் சொல்ல, மேடம் எப்போ ஆபீசரா பதவி ஏற்றாரோ. இவரை அசெம்பிளிக்கு தேர்வு செய்ய உழைச்ச பழைய கதையெல்லாம் சொல்லாமல் இருப்பாரா.

எதிர்க் கட்சிக்காரங்க கேள்வி கேட்குறாங்களோ இல்லையோ. உட்கட்சியில் கோஷ்டி உருவாக்கி முறைகேடு விபரங்களை பட்டியலிட்டு கை காரர்களே சொல்ல தொடங்கிட்டாங்க. பல கோடி ஊழல் நடந்துள்ளதா அந்த கை காரரே தீ மூட்டிட்டாரு.

அசெம்பிளி மேடத்தின் நைனா தான் கேள்வி கேட்டவரின் காட்பாதர். எனவே, அந்த காட்பாதர் தலையிட்டு, ஒரே நொடியில் ஊதி அணைச்சிடுவாருன்னு கை தரப்பில் பேசுறாங்க. அதனால், அசெம்பிளி மேடமை எதிர்க்கிறவர் ரொம்போ ஸ்ட்ராங்கான ஆளுன்னு எப்படி நம்புவது என்று சிலர் முழிக்கிறாங்க.

பணம் பத்தும் செய்யும்; பதினொன்னும் செய்யுணும்னு பழமொழி இருக்க தானே செய்யுது. ஊழல், முறைகேடு, மோசடி பற்றி கை கட்சி மாஜி கவுன்சிலர் பேசினதை பூ கட்சி, நீலக் கொடிக்காரங்க ஏன் பேச தயங்குறாங்க. இதில் என்ன மர்மமோ.

இதுக்கு தானா ஆசைப்பட்டார்?

ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களின் பாக்கி தொகையை வசூலிக்காமல், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகளை இடித்து மைதானம் ஆக்கி, ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த ஆறுமாத வருமானத்தையும் பழைய பாக்கி தொகையையும் யார் தருவது. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது யார். இதற்கு சட்டம் என்ன சொல்ல போகிறது.

இடித்து மைதானம் ஆக்கப்பட்ட இடத்தில், நுாறு தொழிலாளர் குடும்பங்களின் வருமானம் பறிக்கப்பட்ட இடத்தில், தொழிலாளர் தின விழா நடத்த 'கிரவுண்ட் பெர்மிஷன்' கொடுத்திருக்காங்க. இதுக்கு தானா ஆசைப்பட்டாங்க.

எத்தனை ஐந்தாண்டுகள்?

கோ ல்டு சிட்டியில் மா.அரசு தொழிற்பேட்டை ஏற்படுத்த பட்ஜெட்டில் அறிவிச்சாங்க. ஆனால், அந்த திட்டத்தில், உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் எதுவுமே துவங்கலயே.

நடப்பு ஐந்தாண்டில் முடியுமா அல்லது இன்னும் பல ஐந்தாண்டுகள் தேவைப் படுமா. அறிவித்த ஒரே வருஷத்தில போலீஸ் பயிற்சி நிலைய பணிகள் மட்டுமே சுறுசுறுப்பா நடக்கிற போது, எப்போ வரும்; என்ன மாதிரி தொழிற்சாலைகள் வரும் அதன் அறிகுறியே தெரியல.

இதுக்காகவே 'பிரைம் பிளாட்டுகள்' பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க காத்திருக்கிறாங்களாம். உள்ளூருக்காரங்க இங்கு தொழிற்சாலைகள் துவக்க, எத்தனை பேர் நிலம் கேட்டாங்க என்ற லிஸ்ட்டே காணோம். ஏற்கனவே உள்ளூரில் இருக்கிற தொழிற்பேட்டை மூடியே கிடக்குது. இது எப்போ உயிர் பெறுமோ.

அழிவில் ஆதாயம்

கோல்டு மைன்சின் அடையாளங்களை விரைவில் அழிக்க உள் வேலைகள் நடந்து வருகின்றன. சைனாய்ட் மண் மலையை விற்பனை செய்ய செங்கோட்டையில் பேரம் நடத்தி வாராங்க. இது 15 இடங்களில் உள்ளன. 35 லட்சம் டன் எடையளவு கொண்ட மண்ணை, விற்பனை செய்வதில் மகா தொழிலதிபர்கள், அரசியல் செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவோட பல கோடி ரூபாய் வர்த்தகம் விரைவில் நடக்க போகிறது. இதில் சில மக்கள் தலைவர்களுக்கு கமிஷன் மட்டுமே பல கோடி ரூபாய் சேர உள்ளது. கோல்டு நகரின் அடையாளம் அழிவதில் கோடி புரள போகுது. இன்னும் எவையெல்லாம் காணாமல் போகப்போகுதோ.






      Dinamalar
      Follow us