sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மே 13, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 12:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

துக்கத்தில் கொண்டாடலாமா?

மா நில மந்திரி ஒருத்தர் 10ம் தேதி காலமானார். அன்று முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக மாநில கை அரசு அறிவிப்பை வெளியிட்டது. அனைத்து நிகழ்ச்சிகளுமே ரத்து செய்யப் பட்டன.

சி.எம்., - டி.சி.எஸ்., உட்பட அனைத்து மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் பலரும் துக்க நிகழ்ச்சியில் இடம் பெற்றனர். தேசியக் கொடியை உடல் மீது போர்த்தி மரியாதை செலுத்தினர். ஆனால், கோல்டு சிட்டி கை கட்சி அசெம்பிளிக்காரரோ 'பர்த் டே' செலப்ரேஷனை கட்சிக்காரர்களே மிக மகிழ்ச்சியோடு கொண்டாடினாங்க.

இறப்பு தகவலால் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க, மாநிலம் முழுவதும் கை கட்சி சோகத்தில் மூழ்கியிருந்த போது, கோல்டு நகரில் இனிப்புகள் வழங்கி என்னமா கொண்டாடினாங்க.

இதை சுயமரியாதை உள்ள கட்சிக்காரங்க செய்கிற வேலையா இது; கட்சி மேலிடம் ஏத்துக்குமா... மந்திரியாக இருக்கும் கோல்டு சிட்டி அசெம்பிளிகாரரின் நைனா ஏற்பாரா; அவராவது புத்தி சொல்லக் கூடாதா?

விரிசலில் தாமரை!



தா ரை கட்சியின் மாஜி முதல்வரோட 50 ஆண்டுகளின் சர்வீசை மெச்சும் விழா சி.துர்காவில் நடந்தது.

இதில் ப. பேட்டை தொகுதியில், அந்த கட்சியின் ரெண்டு கோஷ்டிகள் தனித் தனியாக சென்று தங்களின் பலத்தை காட்டினாங்க. மாஜி செங்கோட்டை முனி.,யின் ஆதரவாளர்கள் அடுத்த அசெம்பிளி தேர்தலில் 'சீட்' உறுதிபடுத்த பலமான கோஷங்களை எழுப்பி அடையாளம் காட்டினாங்க.

இவங்கள போலவே, மாஜி ப.பேட்டை அசெம்பிளிக்காரரின் மகன் தலைமையில், 'வெயிட்' காட்ட தனி அணியாக வாகனங்களில் வந்து குவிந்தாங்க. ஏட்டிக்கு போட்டி, சமமாகவே இருந்தது.

ப.பேட்டையில், தாமரைக்கு செல்வாக்கு கூடியிருந்தாலும், ஆளுக்கு 50 சதவீதம் பிரித்து, பிரித்து பழையபடி கை பக்கம் வெற்றியை பறி கொடுக்க போறாங்களோ. இதை கட்சி மாநில தலைமை எப்படி சரி செய்ய போறாங்களோ.

மூன்றாவது நபரை ப.பேட்டை தொகுதியில் வேட்பாளராக தயார்படுத்தினால் மட்டுமே பூ மலரும். இல்லையேல், வாய்ப்பே இல்லையென 'டாப்' லீடர்கள் பேசிக்கிட்டாங்களாம்.

ஏற்கனவே, தாமரை மலராமல், கோளாறுள்ள கோலாரு, மறுபடியும் உட்கட்சி மோதலில் பழைய பல்லவியை பாட பாடப்போறாங்க!

வீணாக கரைந்த வரிப்பணம்!



சிங்கப்பூர் போல துாய்மை நகரமாக்க, குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டக் கூடாதென மக்கள் வரி பணத்தில் 50 ஸ்டீல் தொட்டிகளை நகராட்சி நிர்வாகம் ரா.பேட்டையில் நிறுவினாங்க.

அந்த ஸ்டீல் தொட்டிகள் எங்கே, அவை என்ன ஆயின. அதை பிரித்தெடுத்து காயலான் கடைக்கு விற்பனை செய்திட்டாங்களா...

பல லட்சம் ரூபாய் செலவிட்டு, சாலையின் இருபுறமும் ஸ்டீல் தடுப்புகள் அமைத்தாங்க. அது பழுதடைந்து பலமாதமாக கீழே விழுந்து கிடக்குது. அதை சரிசெய்யலயே. ரா.பேட்டை பஸ் நிலையத்தில் 100 பூந்தொட்டிகள் நிறுவினாங்களே. அதையும் காணலயே. அந்த பூந்தொட்டிகள் யார் வீட்டு தோட்டத்தில் குடியேறி விட்டதோ.

அதே பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நுழைய கூடாதென தடுத்தாங்களே... அந்த திட்டத்தை யாருக்காக கை விட்டாங்க. தெரிந்தால் சொல்லுங்களேன்னு சிட்டி மீது அக்கறை உள்ளவங்க எதிர்ப்பாக்குறாங்களே!

மறைமுக வசூல்?



நடைபாதைகளில் கடைகள் இருக்க கூடாதென அவ்வப்போது உத்தரவு போடுறவங்க, பின் அதை கண்டுக் கொள்ளாமல் கண்களை மூடிக் கொள்றாங்க.

நடைபாதை கடைகளில் ஒரு சிலரின் சுய ஆதாயத்துக்கு கணக்குக்கு வராதபடி 'வசூல்' நடக்குதாம். முனிசி., எதிரில் மினி மார்க்கெட்டே உருவாகி இருக்குது. கடைக்காரர்களிடம் யாருக்கு எவ்வளவு வசூலோ...

நடைபாதை வியாபாரிகளின் மீது உண்மையில் அக்கறை இருந்தால், பிற சிட்டிகளில் கடைகள் அமைத்து கொடுத்துள்ளது போல, ஆளுக்கொரு கடையை தயார் செய்து கொடுக்கலாமே. அவர்களிடம் வாடகை வசூல் செய்து முனிசி.,க்கு வருமானம் பெறலாமே.

ஆ.பேட்டை மார்க்கெட் கடைகளின் வாடகை குறித்து முனிசி., வெளிப்படையாக தெரிவிக்காமல் மூடி மறைக்கலா மா; எத்தனை கடைகள் எவ்வளவு பாக்கி வைத்திருக்குது சொல்லக் கூடாதா. பழமையான இந்த மார்க்கெட்டை புதுப்பிக்க எப்போ நல்ல காலம் பொறக்குமோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us