sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மே 15, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உணவு இல்லா உணவிடம்?

தெரு நாய்களுக்கு 35 வார்டுகளிலும் உணவு வைக்க நிலையம் அமைத்ததாக 'பில்டப்' கொடுத்தாங்க. இதுவரை ஒரு இடத்திலும் முனிசி., யில் இருந்து உணவை கொண்டு வந்து அங்கு கொட்டினதா தெரியல. இதுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கினாங்க என்ற விபரமும் வெளிப்படை யாக இல்லை.

எப்போதும் போல் தெருவெல்லாம் தெரு நாய்கள் அலைந்து உணவைத் தேடி திரிகின்றன. குறிப்பாக, இறைச்சி கழிவுகள் உள்ள இடங்களில் தான் பசியை போக்க அவைகள் கூடுகின்றன.

நாய்க்கடியால் பாதிக்கிறவங்க குறைந்தபாடில்லை. முனிசி.,யில் உணவு வழங்க யாருக்கு கான்ட்ராக்ட் கொடுத்தாங்க என்று தெரியல. அட்லீஸ்ட் அவைகள் குடிக்க தண்ணீராவது வழங்க வேண்டாமா. இதுக்காக ஆபீசர்கள் மனம் இறங்குவாங்களா?

*

வாழ்வாதாரத்துக்கு என்ன வழி?

நான் தான் பாலங்கள் கட்டினேன், வடிகால், சாலைகள் அமைத்தேன் என்று மக்கள் பிரதிநிதிகள் சொல்றாங்களே, இவங்க எப்போ கொத்தனாராக மாறி, வியர்வை சிந்தினாங்களோ...

கோல்டு சிட்டிக்காகவே உருவான சுத்திகரிக்கப்பட்ட பேத்தமங்களா குடிநீர் கிடைக்காமல் போனது யாருடைய காலம். அந்த தரித்திர காலத்தின் அவதாரி யார். மீன் சாப்பிட கொடுப்பதை விட, மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதை பெருசா பேசினால் போதுமா?

வாழ்வாதாரத்துக்கு, 'பேக்டரி' அமைப்பதாக சொன்ன சொல்லு என்னவானது. இதை ஒருமுறையாவது யோசிக்க வேணாமா?

எத்தனைப் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைச்சது. சொல்லுங்க தலைவா சொல்லுங்க. 'மைக்' கிடைத்தால் சுய புராணம் கூறுவதையே இன்னும் எத்தனை நாள் ஜனங்க கேட்டுக் கொண்டிருக்க வேணுமோ. மைன்சை மூடு என சொன்னவரை ஜனங்க மறந்து ரொம்போ நாளாச்சு!

*

எல்லாமே ஜி.ஜி., செயல்!

இறந்தவர் உடலை எரிக்க மின் தகன மையம் அமைக்க போறதா பூஜை போட்டாங்க. அந்த பணி பூஜையோடு மறந்துட்டாங்களோ. இப்பவும் பழைய படியே விறகு வைத்து தான் சடலத்தை எரியூட்டல் நடக்குது. ஞாபகப்படுத்த யாரும் இல்லையா; இதுக்காக ஸ்பெஷல் பி.ஏ., ஒருவரை நியமித்துக் கொள்ளலாமே.

ஆக்டிங் எம்.எல்.ஏ.,வாக செயல்பட்டு வருபவரின் முடிவின்படி தானே ஒவ்வொரு அசைவும் தொகுதியில் இயங்குது. அவராவது இவ்விவகாரத்தில் தலையிட்டு நிறைவேற்றலாமே.

ரா.கேம்ப் பகுதியில் உருவாகும் குடியிருப்பு பணிகள், எப்போ நிறைவடைய போகுது. யார் யாருக்கு அங்கு வீடுகள் வழங்க முடிவு. ஜி.ஜி., இதையாவது 'சிட்டி'யின் ஏழைகளுக்கு கிடைக்க செய்யலாமே!

*

-

மைதானத்தை பறிக்கலாமா?

கைபேசி பயன்பாட்டால் தளர்ச்சி அடைந்திருப்பது தபால் துறையும் ஒன்று. பெரும்பாலான தகவல்கள் எல்லாமே நொடி பொழுதில் பரிமாற்றங்களை கைபேசியில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில், கோரமண்டல் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு மைதானத்தை, தபால் துறையினர், தங்களின் குடியிருப்பு வசதிக்காக வேலி அமைத்திருப்பது யாரை குடியமர்த்த போறாங்க. அந்த தபால் நிலையம் இயங்குவதே விதவை, முதியோர், மாற்று திறனாளிகள் பென்ஷன் பெறுவதற்கும், சேமிப்புக்கும் தான்.

கோரமண்டல் தபால் ஆபீசில் ஓரிருவர் மட்டுமே ஊழியர். இப்படி இருக்கையில், யூத்துகளின் விளையாட்டு திடலை கூறுபோட்டு பிரித்து கொள்ளலாமா. வேறு இடமா கிடைக்கல. நகர பகுதியில் காக்கி துறையினர் உருவாக்கி உள்ள குடியிருப்பு போல, தபால்துறை காரர்களும் நகரில் இடம் கேட்டு குடியிருப்பு ஏற்படுத்திக் கொள்ளலாமே. இவங்களும் மைனிங் பகுதியில் தான் இடம் பிடிக்க வேணுமா. யூத் களின் விளையாட்டு மைதானத்தை பறிக்கணுமா. இது கோரமண்டல் பகுதியினரின் குமுறலாக வெளியே கசிந்திருக்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us