தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மே 27, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-

தொண்டர்கள் பற்றாக்குறை

கை கட்சியில் 'குடா' தலைவரா இருந்தவருக்கு 'பர்த் டே' கொண்டாடினாங்க. அவரோட சகாக்கள் பலரும் வந்து சேர்ந்தாங்க.

இதில், ஹை லைட்டாக, அடுத்து நீங்க தான் அசெம்பிளிக்கு தேர்வாக வேணும்ன்னு, கை கட்சியில் இருந்து விலகி, பூவுக்கு தாவின, மாஜி முனிசி., தலைவரு வாழ்த்தின பேச்சு தான், கோல்டு சிட்டி அசெம்பிளி மேடமுக்கு பெருசா எரிச்சலை ஏற்படுத்திடுச்சாம்.

அந்த பேச்சோட ஆடியோ வீடியோவை அவர் கேட்டு வாங்கிட்டாராம். பர்த் டே பங்ஷனுக்கு யார் யார் ஆஜர் என்ற விபரத்தையும் தெரிந்து, சில கை காரர்கள் மீதும் கோபம் ஏற்பட்டிருக்குதாம்.

வெறும் கை காரர்கள் மட்டுமில்லாமல் சர்வ கட்சிகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வெஜ்; நாண் வெஜ் என 'செம விருந்து' நடத்தி அசத்திட்டாராம். இதெல்லாமே அவரின் ஆதரவாளர்களின் செலவு தானாம்.

போகிற போக்கை பார்த்தால், சிட்டியில் அசெம்பிளிக்காரருக்கு ஆதரவாக நிற்க, ஆள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புதிய தலைவலி ஏற்பட்டிருக்குதாம்.

சொன்னது என்னாச்சு?

பெ ட்ரோல், டீசல் விலை உயர்வதால் சிக்கன நடவடிக்கையை கையாள, தாமரைக் காரங்க கார்களில் பயணிப்பதை தவிர்த்து ரயில்களில் பயணம் செய்தாங்க. இதனை வாட்ஸாப், பேஸ் புக், சமூக வலைத் தளத்தில் காட்டினாங்க.

ஆனால், இவர்களின் ட்ராப், பிக் அப் எல்லாமே அவர்களின் பெட்ரோலில் இயங்கும் கார் தானாம். பெரும்பாலான நிர்வாகிகளின் கார்கள் இனி ஓடாமல் ஷெட்டில் ஓய்வில் இருக்கும் என நம்ப வைப்பாங்களா. நடைபயிற்சி, சைக்கிள் வாகனங்களை யூஸ் பண்ணுவாங்களா.

வீடு தோறும் உள்ள பூ கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனங்களும் பரபரப்பா தான் பெட்ரோலில் ஓடிக் கொண்டிருக்குது.

லோக்கலை மறந்த தாமரை

கோ ல்டு சிட்டி அசெம்பிளி தொகுதியில், தேர்தலின் போது பூக்கட்சிக்கு நிகராக செலவு செய்கிற சக்தி 'மாஜி' பூக்காரரை விட்டால் வேறு ஆளே கிடையாதாம். அதனால், அந்த, 'மாஜி'யின் குடும்ப வாரிசுகளை பீல்டில் இறக்குவதை தவிர, அந்த கட்சிக்கு வேறு வழியே இல்லையாம்.

மக்கள் பிரச்னைகளில் காணாமல் போய், தேர்தல் நேரத்தில் மட்டுமே தலை காட்டும் கட்சியாக இந்த பூ கட்சியும் மாறியிருப்பதாக சிட்டியில் 'ரீல்' ஓடுகிறது. சமூக ஊடகங்களில் பூ கட்சியையும் தேடி வலை வீசுறாங்க.

பெமலில் லோக்கல்காரர்களுக்கு பணி நிரந்தரம் ஆக்க கோரும் பிரச்னை, 30 ஆண்டுகளாக தொடருது. வயது முதிர்ச்சியில் அவர்கள் ஓய்வு பெறுவதைத் தான் காண முடியுது.

ஆனால், பாஷையே புரியாத 500 பேருக்கும் அதிகமானோருக்கு மட்டுமே, அது எப்படி தான் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைச்சதோ.

நாட்டை ஆளுகிற பூக்கட்சிக்காரங்களுக்கு இது தெரியாதா. லோக்கலை வெறுக்கலாமா. இவங்களுக்கு கோல்டு சிட்டியில் எப்படி ஓட்டு குவியும். யோசிக்க வேணாமா 'ஜி'

யார் தலையில் கடன் சுமை?

பு ல்லு மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் ஏற்படுத்த தேசிய வங்கிகளிடம் 100 'சி' கடனுக்கு கையேந்தி இருக்காங்க. இந்த கடனுக்கு எதை முதலீடாக காட்ட போறாங்களோ. ஏற்கனவே, இருந்த கடைகளின் வாடகை பாக்கி 1.2 கோடியை வசூலிக்காமல், அதனை இடித்து நொறுக்கி புதுசா டெவலப்மென்ட் காட்ட போறாங்களாம்.

மாட்டு வண்டி ஸ்டாண்ட் வணிக வளாகம், கடைகளை ஒதுக்கும் முன்னதாகவே, அதையும் இடித்து தரை மட்டம் ஆக்கினவங்களுக்கு எந்த அடிப்படையில் கடைகள் வழங்க உத்தேசமோ. இதுக்கு சட்டத்தில் இடம் உண்டா.

ரா.பேட்டை மார்க்கெட்டில் பல கடைகளில் வியாபாரமே இல்லாமல் மூடி கிடக்கிற போது, யாருக்காக, எதுக்காக புதுசா வணிக வளாகம்.

ஏற்கனவே கட்டப்பட்ட பஸ் நிலைய அடுக்கு மாடி வணிக வளாகம் பல வருஷமா மூடியே கிடக்குதே. இதுக்கே வழியைக் காணோம். மேலும் ஒரு வணிக வளாகமா. இதன்பேரில் வங்கி கடனா. இந்த சுமை யார் தலையில் விழுப்போகுதோ!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us