தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஜூன் 01, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெயிக்கப்போவது யாரு?

நா னாக அமைச்சர் பதவி கேட்டு கட்டாயப் படுத்த மாட்டேன். வழங்கினால் அதை ஏற்று சிறப்பாக, பொறுப்பாக பணியாற்றுவேன் என கோல்டன் சிட்டி அசெம்பிளிக்காரர் தெரிவித்திருக்கிறார்.

செங்கோட்டையில் கோலார் மாவட்டத்தின் கை கட்சியின் நான்கு தொகுதிகளில் 3 தொகுதிக்காரங்க, 2 எம்.எல்.சி.,கள் ஒற்றுமையாக சேர்ந்து எங்களுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் அமைச்சர் பதவியை தாருங்கள் என கட்சி மேலிடத்தில் கடிதம் கொடுத்திருக்காங்க.

இந்த கூட்டணியில் கோல்டு சிட்டி அசெம்பிளிகாரரை சேர்த்துக்கல. கோலார் மாவட்ட கை கட்சியில் இவர் மீது என்ன அப்படியொரு அதிருப்தியோ.

ஏற்கனவே, கோல்டு சிட்டிக்காரரின் நைனா மீது தான் அதிருப்தி காணப் பட்டது. இப்போது அவரது மகளையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்திருக்காங்களே.

தனக்கு மந்திரி பதவி கொடுக்கலைனாலும் பரவாயில்லை. ஆனால், என் மகளுக்கு மந்திரி பதவி கொடுக்க வேணும்ன்னு ஒத்தைக்காலில் நின்ற தந்தையார் பாசம் ஜெயிக்க போறதா டில்லி முதல் கோலார் ஹள்ளி வரை கதை கதையா பேசுறாங்க. காற்று இப்படி வேகமா சுழன்று வீசுவதால், மற்ற மூன்று அசெம்பிளிக்காரங்க கலங்குறாங்களாமே.

நகர பகுதி வாழுமா?

பு திய அமைச்சரவை அமைந்த பின்், புதுசாக பல நியமன பதவிகள் இருக்கும். இதிலாவது நகர பகுதிக்கு முக்கியத்துவம் இருக்குமோ. அல்லது இங்கேயும் கிராமத்தின் ஆதிக்கமே இருக்குமோ.

குட்டஹள்ளி பங்காரு திருப்பதி கோவில் கமிட்டியில் சிட்டிக்காரர் ஒருத்தரையும் நியமிக்கல. ஆனால், வில்லேஜ் வாலாவை ரா.பேட்டை பிரபல கோவில் கமிட்டிக்கு சேர்மன் பண்ணியிருக்காங்க. இதை கேட்க கூட சிட்டியின் கை கட்சிக்குள் திராணி இல்லை போல. அடுத்த 'குடா' சேர்மன் பதவி கூட கிராமம் பக்கமே சிக்னலாம். இதனால், சிட்டிக் காரங்கள யோசிக்க வெச்சிருக்குதாம்.

மறந்தவர் மந்திரியா?

கோ ல்டு சிட்டிக்காரர் ஒருத்தரு, 30 வருஷத்துக்கு முன்னாடியே மந்திரியா இருந்தாரு. அதிலும் சிறுதொழில் துறை மந்திரி. ஆனாலும், அவரால் தாம் பிறந்த மண்ணுக்கு சின்னதா ஒரு பேக்டரியோ, ஒரு 100 பேருக்கு வேலை வாய்ப்போ கிடைக்க செய்யலங்கிற குறைபாடு இருந்தவாறே உள்ளது. ஆனாலும், அவர் மண்ணின் மைந்தர்னு இப்பவும் அவரை தலையில் துாக்கி வெச்சி கொண்டாடுகிற ஒரு கூட்டத்துக்கும் குறைச்சலே இல்லையென கை கட்சியில் பேச்சு இருக்கு. தன்னை மட்டுமே உயர்த்திக்க தான் கோல்டு சிட்டி மண்ணின் மைந்தருக்கு 'மந்திரி பதவி' அப்போது பயன் பட்டது. அதே போல கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரருக்கு மந்திரி யோகம் இருக்குதாம். இவரும் 'அவரை போலவே' பதவி நாற்காலி கிடைத்ததும் சொந்த சுகத்துக்கு மட்டுமே 'யூஸ்' செய்யாமல் இருப்பாரா. ஏற்றி வைத்த ஏணிகளை இவரும் மறந்தவராச்சே.

தண்ணீர்... தண்ணீர்...

கோ ல்டு சிட்டி ஜனங்களுக்கு குடிக்க நீர் திட்டத்துக்காக, பேத்தமங்களா ஏரியை வெள்ளைக்காரங்க ஏற்படுத்தினாங்க. சில தொல்லைக்காரங்க அந்த ஏரியையே சுருட்டிக்கிட்டாங்க. இதனால் கோல்டு சிட்டி 'அத்திப்பட்டி' போலானது. ஏதோ, எரகோள் அணை வரப்போகுதுன்னு பெருமை பேசினாங்க. ஏற்பாடு செய்த சி.எம்., பதவியும் பறிபோனது. அங்கிருந்து ஒரு சொட்டு நீரும் கோல்டு சிட்டிக்கு கிடைச்சபாடில்லை. கிருஷ்ணா நதி நீர் கூட தொகுதி பக்கமாவே ஆந்திராவின் குப்பம் பக்கம் ஓடுது. இதில் ஒரு அரை டி.எம்.சி., நீரை கேட்டு வாங்குற சக்தி, மக்கள் தலைவர்களுக்கு இதுவரையில் இல்லை. குடிநீருக்கே பஞ்சமா, கோல்டு சிட்டி இருக்கலாமா. இதை தீர்க்க போகிறவர் யாரோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us