தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சதீஷ் ஜார்கிஹோளி குறித்து அவதுாறு?

 சதீஷ் ஜார்கிஹோளி குறித்து அவதுாறு?

 சதீஷ் ஜார்கிஹோளி குறித்து அவதுாறு?


ADDED : ஜூன் 01, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குறித்து அவதுாறு கருத்து பரப்பியதாக, இரண்டு முகநுால் கணக்குகளின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

'கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா ராஜினாமா செய்ய, முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தான் காரணம்; சித்தராமையாவை பதவியில் இருந்து நீக்க 37 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்தை சதீஷ் ஜார்கிஹோளி வாங்கினார்; சித்தராமையா முதுகில் குத்தி விட்டார்' என, இரு முகநுால் கணக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த பதிவு வைரலானது.

இந்நிலையில் சதீஷ் ஜார்கிஹோளி குறித்து பொய்யாக அவதுாறு பரப்புவதாகவும், குருபா - எஸ்.டி., சமூகம் இடையில் பிரச்னையை துாண்டி விட முயற்சிப்பதாகவும், இரண்டு முகநுால் கணக்கின் நிர்வாகிகள் மீது, சதீஷ் ஆதரவாளர் ராஜசேகர் என்பவர், பெலகாவி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின்படி, முகநுால் கணக்கு நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us