ADDED : ஜூலை 18, 2026 11:04 PM
இது நிஜம் தானா?
கோ ல்டு மைன்சில் உயிரை கொடுத்து வேலை பார்த்தவங்களுக்கு ஒரு அடி நிலமும் சொந்தம் இல்ல. ஆனால், அரசின் வருவாய் துறையின் பல நுாறு ஏக்கர் நிலத்தை முக்கிய பிரமுகர்களே அபகரிப்பு செய்திருப்பதாக உள்ள தகவல்களுக்கு குறைவில்லை. மக்கள் அதிகாரம் பெற்றவங்க, ஆபீசர்கள் உதவியோடு தான் இந்த தில்லாலங்கடி வேலைகள் நடந்திருக்குதாம்.
முறைகேடாக அபகரிப்பு செய்த நிலத்துக்கு கோல்டு சிட்டி வட்டாட்சியர் ஒப்புதல் அளிக்காததால், அவரை அதிரடியாக இடமாற்றம் செய்திட்டாங்க. அடுத்து, புதுசா வந்துள்ள ஆபீசரை சிக்க வைக்க போறாங்களாம். ஏற்கனவே கடந்த, 10 ஆண்டுகளில், 540 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு வழக்கில் ஆபீசர்கள் படிக்கிறாங்க. நடப்பு பத்து ஆண்டில் யார் யார் சிக்க போறாங்களோ!
தெரிந்தால் சொல்லுங்களேன்!
கோ ல்டு சிட்டி வரலாற்றில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை, மாவட்டத்தை விட்டு வெளியேற்றுகின்றனர். இது போன்ற நடவடிக்கை இதற்கு முன் எப்போதுமே நடந்தது இல்லை என்கிறாங்க. அரசியல் பின்னணியில் தான், இப்படி தாறுமாறா காக்கிகளின் 'பவர்' காட்டப் படுவதாக கோர்ட் வட்டாரத்தில் பேச்சு உள்ளது. இது நிஜம் தானா...
தொடர்ந்து கொலை சம்பவங்கள், 'கேங் வார்' இருந்த காலத்தில் கூட, மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவோர் எண்ணிக்கை தற்போது உள்ளது போல் இருந்ததில்லையாமே...
கோல்டு மைன்ஸில் கொள்ளைகள் தொடர்ந்து நடப்பதாக, பல தரப்பில் பேசப்பட்ட போதும் கூட காக்கிகளுக்கு வேலை இருந்ததாக தெரியல.
சிவசமுத்ரா முதல் கோல்டு சிட்டி வரை, மின் இணைப்புக்கு பயன்படுத்திய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல டன் செம்பு கம்பிகள் எங்கே, எப்படி மாயமானது. அப்போதெல்லாம் காவல் துாங்கிக் கொண்டிருந்ததா...
மூடப்பட்ட சுரங்கத்தில் கயிறு மூலம் பாதாளம் இறங்கி தங்க மண்ணை, மூட்டை மூட்டையாக திருடி வெளியே எடுத்ததாக பேசப் பட்டதே அது பொய்யா. அவர்களில் யாரை மாவட்டத்தை விட்டு வெளியேற்றினாங்க. தெரிந்தவங்க சொல்லுவாங்களா!
என்ன சொல்லுது சட்டம்?
கோ ழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா இதுக்கு இன்னும் முடிவு தெரியல. தென் இந்தியாவில் சட்டப் பிதாவுக்கு, 63 ஆண்டுக்கு முன், முதல் சிலையை கோல்டு சிட்டியில் வைத்தாங்க. பிறகு தான் பூங்கா ஏற்படுத்தினாங்க.
பூங்காவில் எந்த ஒரு கட்டடமும் இருக்க கூடாது என்று ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு. பூங்காவில் பவன், சிலைகள், நினைவிட கட்டடம் எதுவும் இருக்க கூடாதென்பதும் அதில் அடங்காதோ.
பூங்கா நகரில் உள்ள கப்பன் பூங்காவில் உயர் நீதிமன்ற கட்டடம் இருக்குதே. பொது நுாலகம் உட்பட பல கட்டடங்கள் இருக்கலாமா. அதை இடிப்பாங்களா. இதுக்கு சட்டம் என்ன சொல்ல போகுதோ.
