/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முல்பாகல் பால் உற்பத்தி மையத்தில் ரசாயனம் கலந்தது கண்டுபிடிப்பு
/
முல்பாகல் பால் உற்பத்தி மையத்தில் ரசாயனம் கலந்தது கண்டுபிடிப்பு
முல்பாகல் பால் உற்பத்தி மையத்தில் ரசாயனம் கலந்தது கண்டுபிடிப்பு
முல்பாகல் பால் உற்பத்தி மையத்தில் ரசாயனம் கலந்தது கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 19, 2025 11:16 PM
கோலார்: பால் உற்பத்தி மையத்தில் கலப்பட பால் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலில் அபாயமான ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின் சவடூர் கிராமத்தில் நரேஷ் ரெட்டி என்பவருக்கு சொந்தமான பால் உற்பத்தி மையம் உள்ளது. இந்த மையத்தில் தரமற்ற பால் தயாரித்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜூன் 1ம் தேதியன்று, போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து, பால் உற்பத்தி மையத்தில் சோதனை செய்தனர்.
அங்கிருந்த பாலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ரசாயனம், உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பால் மாதிரியை தடயவியல் ஆய்வகத்துக்கு அதிகாரிகள் அனுப்பியிருந்தனர். அங்கிருந்து நேற்று அறிக்கை வந்துள்ளது.
பாலில் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயமான ரசாயனம் கலந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பால் பயன்படுத்த தகுதியற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. நரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடக்கிறது.
இம்மையத்தில் தயாரிக்கப்பட்ட கலப்பட பால், கர்நாடகா மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள திருமலா பால் டெய்ரிக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.